உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இளங்குமரனார் தமிழ்வளம்

18

உண்டோ அவ்வளவும் தாமே விரும்பி ஏற்றார். விருப்பு வெறுப்பற்ற, இன்ப துன்பமற்ற உயர்நிலையில் ஓங்கினார்.

காற்று

ஒரு நாள் வலுவான மழை பொழிந்தது. வெருட்டியது. குளிர் நடுங்கியது; ஒரு குடிசையின் கூரை இறைப்பிலே சுவரோடு ஒன்றி நின்றார் புத்தர். உள்ளே இருந்த குடியானவன் சன்னல் வழியே ஒருவர் நிற்பதைக் கண்டான். ‘அங்கேயே நில்; மஞ்சள் உடையினவே. உனக்கு அந்த இடம் போதும்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு பாடினான்;

66

“என் மாடுகள் வீட்டுள் வந்துவிட்டன; எரிநெருப்பு நன்றாகவே எரிகின்றது; என் இல்லாளும் இங்கேயே பாதுகாப்பாக உள்ளாள்; என் குழந்தைகளோ இன்பமாக உறங்குகின்றனர்; கருமேகங்களே நீங்கள் இரவெல்லாம் கவிந்து

மழை பொழியுங்கள்.”

வெளியே இருந்த புத்தரும் பாடினார்; “என் மனம் பாதுகாப்பாக இருக்கிறது. என் புலன்கள் எல்லாம் உள்ளே. கருமுகில்களே நீங்கள் இரவுப்பொழுதெல்லாம் கவிந்து மழை பொழியுங்கள்.

குடியானவன் உள்ளம் உருகியது; ஓடிப்போய்க் கதவைத் திறந்தான். அவன் மனக் கதவும் திறந்தது. புத்தரின் பொன்னான அன்பருள் ஒருவன் ஆனான்.

புத்தர் பெருமான் தம் அனுபவத்தில் கண்டவற்றையும் ஆராய்ந்து அறிந்தவற்றையுமே தம்மை நாடியவர்களுக்குப் போதித்தார். மிக எளிமையாக ஆனால் மிக ஆழமாக ஊன்றுமாறு உரைத்தார். உவமைகளால் தம் கருத்தை விளக்குவதில் தேர்ந்த வித்தகர் புத்தர் பெருமான்.

66

“ஆறுகள் கங்கை பிரம்மபுத்திரா நருமதை எனப் பல பெயர்கள் தாங்கி ஓடுகின்றன. ஆனால் அவை கடலைச் சார்ந்ததும் தம் பெயர்களை இழந்து விடுகின்றன. அவ்வாறே புத்த சங்கத்தைச் சார்ந்த எவராயினும் தம் சாதியை இழந்து விடுகின்றனர்.” என்பது புத்தரின் பொன் மொழிகளுள் ஒன்று.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு இதனைப் பார்க்கிலும் அரியதோர் உரை வேண்டுமா? தனி மனிதர்கள் தத்தம் தனித் தன்மைகளையே போற்றிக் கொண்டிருக்கும் அளவும் பொதுமை நிலை என்னும் ஒருமைப்பாட்டு நிலை ஏற்படாது அல்லவா.