உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

L

75

நீங்கள் உங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். நல்லவர்களாகவும், தூயவர்களாகவும், இனியவர்களாகவும் வாழுங்கள்” என்றார். ஆம் இவ்வுலக வாழ்வில் மாந்தர் நல்லவர்களாகவும் தூயவர் களாகவும் இனியவர்களாகவும் வாழ்வதைப் பற்றியே புத்தர் எண்ணினார். அதனையே உரைத்தார். அதற்காகவே அயராது பாடுபட்டார். உயிர்களுக்குத் தொண்டு செய்வதே இறைவனுக்குச் செய்யும் தொண்டெனக் கொண்டார்.

வயிற்றுப் போக்கினால் மிக வருந்தினார் ஒரு புத்த பிட்சு. பிக்குவுக்கு வயிற்றுப் போக்குத் தொடர்ந்து ஏற்படவே அவர் உடலையும் உடையையும படுக்கையையும் அடிக்கடி தூய்மை செய்ய வேண்டியதாயிற்று. புத்தர், தாமே அதனைச் செய்தார். “பிக்குகளே, எனக்குப் பணிசெய்ய எவராவது விரும்பினால், எனக்குப் பணி செய்வதே போல இப்பிணியாளருக்குப் பணி செய்யுங்கள்” என ஏவினார்.

புத்தர் பெருமானின் தொண்டில் தம் உள்ளத்தைப் பறிகொடுத்தார் விவேகானந்த அடிகள். “யான் புத்தரின் தொண்டருக்குத் தொண்டன்; அவரைப் போலத் தொண்டர் எவரே இருந்தனர்; தமக்காக ஒரு போதும் ஒன்றும் செய்து கொள்ளாதஅவ்வள்ளலார் உள்ளம் உலகை எல்லாம் அணைத்துக் கொண்டது. ஓர் ஆட்டுக் குட்டிக்காகத் தம் உ உயிரையே அளிக்க வல்ல அரச குமாரரும் துறவியருமான அவருக்கு உயிர்களிடம் அவ்வளவு அருள் நிரம்பி வழிந்தது. ஒரு பெண்புலியின் பசியை ஆற்றத் தம்மையே துறக்குமளவுக்கு அவர் அன்பு இருந்தது. மனித இனத்தின் வரலாற்றிலே முதன் முதலாக விரிந்த ஒரு நெஞ்சினின்றும் அத்தகைய அன்பு பொங்கி வழிந்து மக்களுக்குப் பணி செய்வதோடு நில்லாமல் அனைத்துயிர்களுக்கும் பணி செய்வதில் ஈடுபட்டு நின்றது அச்சமயத்திலே தான்” என்று பாராட்டுகிறார்.

“தம் துயர் பொறுத்தல்; பிற உயிர்களுக்குத் துயர் செய்யாமை” என்பவை தவத்தின் உருவம் என்றார் திருவள்ளுவர். த்தவத்தின் வடிவாக விளங்கினார் புத்தர் பெருமான். காற்று மழை, வெயில் பனி, காடு மேடு, பசி பட்டினி ஆகிய இயற்கையோடு போராடிப் போராடி ஊற்றம் பெற்றார். இன்பத்தின் எல்லையென எவ்வளவு உண்டோ அவ்வளவும் கண்ட அப்பெருமகனார் துன்பத்தின் எல்லையென எவ்வளவு