உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இளங்குமரனார் தமிழ்வளம்

18

ஒரு நாள் புத்தரின் மாணவர் ஒருவர் ஆன்மாவின் முடிந்த முடிவு பற்றி வினாவினார். “இதற்கு நேரே விடை கூற வேண்டும்: அல்லது தெரியாது என்று கூறிவிட வேண்டும்" என்றும் அடக்கமாகக் கேட்டார். அப்பொழுது புத்தர் கூறினார்.

ஒரு மனிதன் நஞ்சு தோய்ந்த அம்பால் தாக்கப்படுகிறான். அவன் நிலைமைக்கு இரங்கிய மருத்துவன் ஓடோடி வந்து அம்பினை மெல்ல அசைத்தெடுத்து மருந்து கட்டத் தொடங்கு கிறான், அப்பொழுது அம்பு தைக்கப் பெற்றவன் கதறி அழுது கொண்டே, "வேண்டா; வேண்டா; அம்பைப் பிடுங்குவதை நிறுத்துங்கள்; அம்பை எய்தவர் ஆணா? பெண்ணா? அவர் என்ன தொழில் செய்பவர்? குள்ளமானவரா? வளர்ந்தவரா? அம்பு எதனால் செய்யப் பெற்றது? இவ்வினாக்களுக்கெல்லாம் விடை தெரிந்த பின்னரே அம்பை எடுக்க வேண்டும்” என்று தடுத்தான். இவ்வினாக்களுக்கு விடைகாணும் வரை அவன் உயிரோடு இருப்பானா? இறந்து படுவான் அல்லனோ? அதுபோல் ஆன்மாவின் முடிந்த முடிவை அறியுமுன்னரே வாழ்வு முடிந்து போகும்" என்றார்.

வீட்டுலகம் பற்றி அவரிடம் வினாக்கள் தொடுக்கப் பெற்றன. அப்பொழுதில் “முட்டைக்குள் இருக்கும் குஞ்சு வெளியுலகைப் பற்றி எவ்வாறு அறிந்து கொள்ளாதோ அவ்வாறே இவ்வுலகினின்றும் விடுதலை பெறும் வரையும் அவ்வுலகை அறிந்து கொள்ள இயலாது. மெய்ப்பொருளை உணர வேண்டுமாயின் சங்கத்தைச் சார்ந்து அறத்தைக் கடைப் பிடியுங்கள்” என்றார்.

66

ஒரு சமயம் புத்தரிடம் ஐந்து முனிவர்கள் சென்றனர். "பெரியீர், ‘இத்தகையன்; இதுவே இறைவனை அடையும் வுழி' என எங்கள் நூல் கூறுகிறது” என்றார் ஒருவர். மற்றொருவர் ‘அவர் கூறுவது தவறு; எங்கள் நூல் இவ்வாறு கூறுகிறது.” என மறுத்தார். பிறரும் இவ்வாறே கூறினர். புத்தர் இவர்களைப் பார்த்து, “இறைவன் சினங்கொள்கிறான்; தீங்கு இழைக்கிறான்; தூய்மையற்றவனாக இருக்கிறான்” என உங்கள் சமய நூல்களில் ஒன்றாவது உரைக்கின்றதா? என்றார். “இல்லை பெருமானே; இறைவன் இனியவன்; தூயவன்; நல்லவன்;” என்றே எங்கள் நூல்கள் உரைக்கின்றன என்றனர். அவ்வாறானால்“அன்பர்களே, இறைவன் எத்தகையவன் என்பதைத் தெரிந்து கொள்ளுமுன்