உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

வாழ்வியல் வளம்

73

'இவ்வாறாகவும், சாரிபுத்தரே! உம்முடைய சொற்கள் ஏன் இவ்வளவு பகட்டாகவும் துணிவாகவும் உள்ளன” என்றார் புத்தர் பெருமான்.

99

ஒரு நாள் சின்சுபாச் சோலை ஒன்றில் தங்கியிருந்தார் புத்தர். சின்சுபா மரத்தில் இருந்து சில இவைகளைப் பறித்துக் கையில் வைத்துக் கொண்டார். தம் சீடர்களை நோக்கி “என் கையில் இருக்கும் இலைகள் மிகுதியா? இல்லை மரத்தில் உள்ள இலைகள் மிகுதியா? என வினாவினார். “கையில் உள்ள இலைகளினும் மரத்தில் உள்ள இலைகளே மிகுதி" என்றனர். உடனே புத்தர் கூறினார்; “அன்பான சீடர்களே என் கையிலுள்ள இலைகளைப் போல, நான் இவ்வுலகில் தெரிந்து கொண்டவை சிலவேயாம்; தெரிந்து கொண்டவற்றுள்ளும் உங்களுக்குத் தெரிவிக்காதவை மிகுதியானவாம்" என்றார். "இவ்வுலகில் எப்பொழுதும் முற்றும் அறிஞராய் இருந்தவர் அவர் ஒருவரே; அறிஞராகவே பிறந்தவரும் அவரே” என்று விவேகானந்தரால் பாராட்டப் பெறும் புத்தர் பெருமகனாரின் அடக்கத் தன்மை இது.

"அறிய அறியத்தான் இதுகாறும் அறியாதவை எவை என்பது புலப்படும்” என்றார் திருவள்ளுவர்.

66

எனக்கு ஒன்றே ஒன்றுதான் தெரியும்; அதுவும் எனக்கு ஒன்றும் தெரியாது என்பதுதான்” என்றார் அறிஞர் சாக்ரடீசு.

"மிகுதியாகப் படித்து, மிகுதியாகச் சிந்தித்த பின், நான் உணர்ந்து கொண்டது இதுதான்; தெரிந்தது எவ்வளவு கொஞ்ச மானது; தெரிய வேண்டியது எவ்வளவு மிகுதியாக இருக்கிறது என்பதுதான்” என்றார் நேரு பெருமகனார்.

66

‘கற்றது கைம்மண் அளவு: கல்லாதது உலகளவு” என்றார் ஒளவையார்.

-

வெவ்வேறு ஆம்! வாழ்வாங்கு வாழ்ந்த பெருமக்கள் காலங்களில், வெவ்றுே இடங்களில் இருந்து வெவ்வேறு மொழிகளில் குரல் எழுப்பினாலும் அக்குரல்கள் ஒருமைப் பாடுடையனவாகவே திகழ்கின்றன.

புத்தர் பெருமான் தம் மாணவர்களுக்குத் தாம் அறிந்த எல்லாவற்றையும் போதித்தார் அல்லர்; மறைக்கவும் அவர் விரும்பினார் அல்லர்; அவர்கள் நிலைக்குத் தக்கன எவையோ அவற்றையே உரைத்தார்.