உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இளங்குமரனார் தமிழ்வளம் 18

கண்மூடித்தனமாக நம்புவதைக் கடிந்தார். ஒருமுறை தம் சீடர்களுக்கு உரைத்த செய்தி இது.

6

“ஒருவர் எத்தகைய பெரியவர் ஆயினும், அவர் உரைப்பதைக் கேட்ட அளவில் அப்படியே நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள்; வழிவழியாக வந்த கருத்து என்பதற்காகவும் ஏற்றுக் கொள்ளா தீர்கள்; எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் ‘அப்படித்தான் இருக்க வேண்டும்' என்பதாகவும் ஏற்றுக கொள்ளாதீர்கள் நம்முடைய மதிப்புமிக்க நூல்களின் மாண்பான பக்கங்களில் உள்ளது என்பதற்காகவும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்; உங்கள் அன்பான குருவின் உரை என்பதற்காகவும் ஏற்றுக் கொள்ளதீர்கள்; பொன்னை நன்றாகச் சுட்டும், பதனாக வெட்டியும் உரைகல்லில் தேய்த்தும் மாற்றுக் காண்பார் போல நீங்களும் ஆராய்ந்து கொள்ளுங்கள்” என்றார்.

புத்தரின் அறிவுரையை ஏற்றுக் கொள்வதில் சீடர்களுக்குத் தயக்கம் உண்டாகவில்லை. ாகவில்லை. ஆனால், அவர் உரையையும் அலசிப்பார்த்து ஆராய்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறியதே தயக்கமாக இருந்தது. ஆழத்துள் ஆழமாகச் சென்று ஆராய்ந்தெடுத்த முத்துப் போன்றவை புத்தர் மொழிகள். அவற்றை, மேலும் ஆராய்ந்து கொள்ள வேண்டுமா? சாரி புத்தர் என்பவர் புத்தரிடம் வினாவினார்:

"பெருமானே, தங்களினும் சீரியர் உளரோ? சிந்தனையாளரும் உளரோ? இதுகாறும் இருந்ததே இல்லை என்றார், இதனைக் கேட்ட புத்தர் உள்ளம் புழுங்கியது;

"சாரி புத்தரே, நீவிர் இதுகாறும் இருந்த புத்தர்கள் அனைவரையும் அறிவீரோ?” என வினாவினார்.

66

“அறியேன்” என்றார் சாரி புத்தர்.

66

இனிவரும் புத்தர்களையேனும் அறிவீரோ?" என மீண்டும் வினாவினார் புத்தர்.

66

'அவரையும் அறியேன்” என்றார் சாரி புத்தர்.

·

சரி; நீவிர் என்னையாவது முழுமையாக அறிந்து கொண்டதுண்டோ?" என மேலும் வினாவினார் புத்தர்.

66

'இல்லை பெருமானே" என்றார் சாரிபுத்தர்