உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சான்றோர் சால்பு

இந்திய நாட்டுக்கு எத்தனையோ பெருமைகள் உண்டு. அவற்றுள் புத்தர் பெருமான் பிறந்தது தனிப்பெருமையாகும். “பாரத நாடு பழம்பெரு நாடு” என்று பாடினார். பாரதியார். பாரத நாட்டின் பழம் பெருமைகளுள், ‘பூரண ஞானப் பொலிவு’ என்பது சிறப்பாகத் தோன்றியது பாரதியார்க்கு, அவர் பூரண ஞானியரை, முழுதுணர் அறிஞரை--எண்ணினார்; அவர்களுள் முதல் வரிசையில் முதல்வராகக் காட்சி வழங்கினார் புத்தர் பெருமான். அதனால்

66

பூரண ஞானம் பொலிந்தநன் னாடு

புத்தர் பிரானருள் பொங்கிய நாடு

பாரத நாடு பழம்பெரு நாடே

பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே"

என்று பாடிப் பரவினார்.

புத்தர் பூரண ஞானி -- உயர்வற உயர்ந்த பேரறிஞர் அவர் அரிதில் முயன்று பெற்ற ஞானத்தால் புத்தர் என்னும் சிறப்புப் பெற்றார் ‘போதிமாதவர்’ எனவும் ‘போதிசத்துவர்' எனவும் புகழப் பெற்றார். அவர் பெற்ற போதச் சிறப்பு. எந்த மரத்தின் அடியில் யில் இருந்து போதம் பெற்றாரோ, அந்த மரத்திற்கும் சிறப்புத் தந்தது. அரச மரம் ‘போதிமரம்' என்னும் பெருமை பெற்றது. புத்தருக்கு நிழல் தந்த பெருமையால் பெற்ற பெயர் அது என்றால்--அவர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, பிறங்கிய நாட்டின் பெருமைக்கு அளவும் உண்டோ? ஆசிய சோதியை உலகப் பேரொளியை அறக்கதிராழி உருட்டிய அண்ணலைப் பெற்ற பெருமை இந்தியாவுக்கு ஆயிற்று.

எந்த ஒன்றையும் சிக்கற ஆராய்ந்து, செம்மையாக உணர்ந்து. சீராகச் செயலாற்றுதலையே புத்தர் பெருமான் விரும்பினார்.