உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இளங்குமரனார் தமிழ்வளம் - 18

வெறுக்குமாறு பேசிய வரையும் அவர்க்கு அப்பேச்சால் தீமை வரக்கூடாதே என வாழ்த்துதல், ஒரு தும்மல் உண்டானால் கூட அதன் வழியாகத் தீமை எதுவும் வந்துவிடக் கூடாதே என வாழ்த்துதல், அறத்தை அரசை இறையை வாழ்த்துதல் என வாழ்த்துதல் பண்பாட்டை நம்மவர் போற்றினர்.

6

ஒர் உழவன்; சிறு குடி என்னும் ஊரில் வாழ்ந்தவன்; பசி நோய்க்கு மருத்துவனாக விளங்கியவன். அதனால் பெரு மன்னனாகிய கிள்ளிவளவன் அச்சிறு குடிக்குச் சென்றான். பண்ணனை நோக்கி “யான் வாழும் நாளையும் உனக்கு தான் வழங்குகிறேன்; நீ நெடுங்காலம் வாழ்வாயாக" என வாழ்த்தினான்.

இது நிகழ்ந்து ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் அப்பண்ணனும் கிள்ளிவளவனும் நம் காதுகளில் ஒலிக்கக் கேட்கிறோம். அவர்கள் இன்றும் சாவா உடம்பினராக புகழுடம்பினராக வாழ்வது கண்டு பூரிப்படைகிறோம்! ‘எண்ணம் போல வாழ்வு' என்பதன் சான்றானவர்கள் தாமே இவர்கள்

பாரதியார் ‘நமக்குத் தொழில் கவிதை நாட்டுக்கு ழைத்தல்; இமைப் பொழுதும் சோராதிருத்தல்' என்று தம் வாழ்வுத் திட்டத்தை வகுத்துக் கூறினார். அத் திட்டங்களையே வாழ்வாகக் கொண்டார்.

சக்தியினிடம், “வல்லமை தாராயோ, இந்த வையகம் பயனுற வாழ்வதற்கே” என்று வரம் கேட்டார்; வாழ்ந்து காட்டினார். "பாரதியார் பரம்பரை” எனப் பெரியதோர் பரம்பரையை வாழும் நாளிலேயே காணவாழ்ந்தார். “பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியடா" எனக் கவிக்கு மணியாம் கவிமணி பாராட்டும் புகழ் வாழ்வு பெற்றார். எண்ணம் போல வாழ்வு என்பது ஓர் அருமையான பண்பாட்டு மதிப்பீடு ஆகும்.

L