உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

69

உள்ளம் உயர உயரப் பறக்கும் ஒரு பறவை; எட்டா உயரத்திற்கும் ஏறிப் பறக்கும் பறவை. விழுந்து கிடந்தாலும் கிடக்கும்; எழுந்து விட்டாலோ ஏறா மேட்டிலும் ஏறும்; அதற்கு இமயம்தான் என்ன, அண்டம் கடந்த அண்டம் தான் என்ன? அதன் காலடிக்குள் வந்து விடும். அதனால்தான், “ஓங்கிய முயற்சியாளிக்கு உலகமே காலடிக்குள் வந்து விடும்” என்று பொய்யாமொழி புகன்றது.

இதோ உள்ளத்தின் உயர்வை உரைக்கும் ஓர் எளிய

பாட்டு;

குருவி பறக்கும் வீட்டின்மேல்

கொக்குப் பறக்கும் அதற்கு மேல் க ாக்கை பறக்கும் அதற்குமேல் பருந்து பறக்கும் அதற்குமேல் புறாப் பறக்கும் அதற்குமேல் எல்லாம் உயரப் பறந்தாலும் என்மனம் போலப் பறந்திடுமோ

என்பது அவ்வுள்ள உயர்வுப் பாட்டு.

தரமான விதைகளைப் பயன் படுத்துமாறு வேளாண்துறை அறிஞர்கள், உழவர்களுக்குப் பரிந்துரை செய்கின்றனர். அவ்வாறே பண்பாட்டு அறிஞர்கள். ஒவ்வொருவர் எண்ணத்திற்கும் வாழ்வுக்கும் உள்ள தொடர்பினைக் கண்டே ‘எண்ணம் போல வாழ்வு' என்று பயன் பாராட்டுச் செய்கின்றனர்.

வாழ்வில் பாராட்டுதல் பண்பு கட்டாயமாக வேண்டும். பரிசு வழங்குதல் விருது வழங்குதல் என்பவற்றைப்போல் பாராட்டும் பண்பு அதற்கு உரியவரை ஊக்கப்படுத்தி மேலும் மேலும் நல்லவற்றைச் செய்யத் தூண்டி அவரையும் அவரைச் சாந்தவரையும் நாட்டையும் உயர்த்தத் துணையாகும். செலவு இல்லாததாய், நெஞ்ச நிறைவைக் காட்டுவதாய், பிறரை ஊக்கப் படுத்தி உயர்த்தக்கூடியதாய் உள்ள வாழ்த்துதல் பண்பை நெஞ்சாரக் கொள்ளலாமே! வாயாரப் பாராட்டலாமே!

நம் முன்னவர் பண்பாட்டில் தலையாய பண்பாடாக இருந்தது. வாழ்த்துதல் பண்பாடு. ஒருவரை ஒருவர் சந்திக்கும் போதும் வாழ்த்துதல்; பிரியும்போதும் வாழ்த்துதல்; சிறுதுயர் பெருந்துயர் என எத்துயர்ப் பொழுதிலும் வாழ்த்துதல், மனம்

6