உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இளங்குமரனார் தமிழ்வளம்

18

வள்ளலாரைத் தொழுவூர் வேலாயுதனார் சார்ந்தார் பெரியாரை அண்ணா சார்ந்தார்--பெரும்புகழாளர்களாக விளங்குகின்றனர்.

வியப்பினும் வியப்பு; தாயுமானவர் மௌன குருவைச் சார்ந்தார். பேசாப் பேரடிகளாம் அவரால், சும்மா இருக்கும் அருந்திறத்தைக் கற்றுக் கொண்ட கலைமாச் செல்வர் ஆனார். துணைக்கொள்ளும்

பெரியாரைத் துணைக் கொள்ளும் பயனை, “பருமரத்தை அண்டிய பல்லியும் பிழைக்கும்” என்னும் பழமொழி எளிமையாய் விளங்கும்.

அந்த ஊருக்குத் தாமரைக் குளம் என்பது பெயர்; ஊர் தோன்றுவதற்கு முன் தாமரைக் குளம்தான் இருந்தது அதனைச் சார்ந்து ஊர் தோன்றியது. அதனால் அதற்கும் ‘தாமரைக் குளம் எனப்பெயராகி விட்டது.

தாமரைக் குளத்தில் உள்ள தாமரைப் பூக்கள் காலம் காலமாகப் பேசா மொழியில் பேசி வரும் செய்தி உண்டு. அந்த ஊர்த் தாமரைப் பூக்களுக்கு மட்டுமா? எந்த ஊர்த் தாமரைப் பூக்களுக்கும் இப் பேசாப் பேச்சு உண்டு! அது என்ன?

“நாங்கள் நேற்று மூன்றடி உயரத்தில் இருந்தோம். நேற்றுப் பெய்த மழையால் மூன்றடி அளவுக்குத் தண்ணீர் வந்தது; நாங்கள் ஆறடியாக உயர்ந்து விட்டோம். இன்று மழை பெய்து தண்ணீர் வந்தாலும் வந்த தண்ணீர் உயரத்திற்கு நாங்களும் உயர்ந்து விடுவோம். எங்கள் உயரத்தை வெள்ளமா கொண்டு வந்தது? எங்கள் உயரம் எங்கள் உள்ளேதானே இருந்தது அது போல் மனிதர்களே உங்கள் உயர்வு உங்களுக்கு உள்ளேயே உள்ளது. உங்கள் உள்ளத்திலேயே உள்ளது. உங்கள் உள்ளம் உயரட்டும் உங்கள் உயர்வு தானே வெளிப்பட்டு விடும்” என்று பேசாப் பேச்சாய்க் காலமெல்லாம் பேசுகின்றன.

இப் பேசாப் பேச்சைப் பேசும் பேச்சாக்கிக் காட்டினார் திருவள்ளுவர்; கேட்பார் கேட்கட்டும்; காண்பார் காணட்டும்; சிந்திப்பார் சிந்திக்கட்டும்; உயர்வார் உயரட்டும்; உண்மை உரைப்பது எம்கடன் என உரைத்தார் அவ்வுரை,

66

என்பது.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனைய துயர்வு”