உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

67

பொன்னினும் மேலாகப் போற்றிக் கொள்ள வேண்டும் என்றும் உறுதி கொள்ள வேண்டும். ஏனெனில் அருமையாய்க் கிடைத்த வாய்ப்பை எளிமையாய் இழந்து போகக் கூடாதே. அதனால், பெரியவர் வருந்துமாறு நடந்து கொள்ளுதல் ஆகாது என்பதை வலியுறுத்தப் 'பெரியாரைப் யாரைப் பிழையாமை' என்றோர்

அதிகாரத்தைத் திருவள்ளுவர் படைத்துக் காட்டினார்.

பெரியாரைத் துணைக் கொண்டால் என்ன பயன் கிட்டும் என்றால் மிக எளிமையாக அப்பெரியார் தகுதி வாய்த்துவிடும் என்பது தெளிவாகும்.

ஒன்று,தம்மை

பெரியவர் ருெந்தன்மைகள் பல. அவற்றுள் குறிப்பிட்டுக் கூறத் தக்கவை இரண்டு. ஒன்று, தம்மை நோக்கி வந்தவர் சிறுமை, குறை, அறியாமை என்பவற்றைக் கருதாது பரிவுடன் பார்த்தல், மற்றொன்று, அத்தகையரையும். தம் நிலையை அடையத் தக்க வழிகளையெல்லாம் காட்டி உயர்த்துதல் என்பது, மறைந்து போன பழமையான நூலாகிய ஆசிரியமாலை என்பதில கிடைத்த ஒரு பாடல் இதனைக் குறிப்பிடுகிறது.

66

அப்பெரியவர் நற்குடிப்பிறப்பை உடையாக உடுத்தவர்; நூலறிவைப் பூவாகச் சூடியவர்

ஒழுக்கத்தை அணிகலமாகப் பூண்டவர்

வாய்மை பேசுதலை உணவாகக் கொண்டவர்.

தூய்மை இல்லத்தில் அறவாழ்வு வாழ்பவர்,

நடுவு நிலைமை என்னும் நகரில் உறைபவர்

பொறாமை இல்லாமை ஆசையில்லாமை என்னும் செல்வங் களைச் சேர்த்தவர், தோல்வி இல்லாத சொல்லைச் சொல்லும் மேலோர் அவர்” என்று அப்பாடல் விரித்துக் கூறுகிறது.

“அப்பெருமக்களோடு ஒரே ஒரு நாள் உடனாகி இருக்கும் பேறு வாய்க்குமானால் மாறி மாறி எத்தனை பிறவிகள் வேண்டு மானாலும் பிறக்கலாம்” என்று முடிகிறது அப்பாடல்

பெருஞ்சிந்தனையாளர் சாக்ரடீசைப் பிளேட்டோ சார்ந்தார்; அவரை அரிட்டாட்டில் சார்ந்தார்; அவரை அலெக்சாண்டர் சார்ந்தார் அனைவரும் உலகப் புகழ் பெற்றனர்.

இராமகிருட்ணரை விவேகானந்தர் சார்ந்தார்; அவரை நிவேதிதா சார்ந்தார் அவரைப் பாரதியார் சார்ந்தார் அனைவரும் உலகப் புகழ்பெற்றனர்