உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இளங்குமரனார் தமிழ்வளம்

18

கிடைத்து விடுகிறார். அத் திருமண விழாவுக்குச் சென்றவர்கள் அனைவரும் “மனம் போல வாழ்வு” என்றும் ‘மனம் போல மாங்கல்யம்' என்றும் வாய்குளிரப் பாராட்டுகின்றனர்.

நல்லவர்களையும் அவர்கள் வாழ்வின் சிறப்பையும் இணைத்துச் சொல்வதே ‘எண்ணம் போல வாழ்வு' என்பது. அதற்கு மாறான இயல்பையும் வாழ்வையும் இணைத்துச் சொல்வதற்கு இப்பழமொழியில் இடமில்லை.

“எண்ணத்திற்கும் வாழ்வுக்கும் தொடர்பு உண்டா?' எனின், “தொடர்பு உண்டு; மிக மிக உண்டு" என்பது பலரும் அறிந்ததே. இதனைச் சான்றோர் நூல்களும் அறிவாளர் உரைகளும் நன்கு விளக்குகின்றன.

விதைக்கும் வித்துக்கும், அதன் விளைவுக்கும் உள்ள தொடர்பு போல ஒருவர் எண்ணத்திற்கும் அவர் வாழ்வுக்கும் ஒருப்பட்ட தொடர்பு உண்டு.

தேர்ந்தெடுத்த விதைகளைப் பூச்சி புழுக்கள் பற்றாமல் பாதுகாத்து, உரிய பருவத்தில், பண்படுத்திய நிலத்தில் விதைப்பது ஏன்?

வித்து நன்றாக இல்லை என்றாலும், பருவமும் வாய்ப்பும் சீராக இல்லை என்றாலும் உரிய விளைவை அடைய முடியாதே

L

பொறுக்கு மணியில் இருந்து பெருக்கமான விளைவைக் காண பிறவும் சேர்ந்து விடுகின்றனவே. மனமும் மழைநீர் போன்ற தூய்மையானதுதான். அது சார்ந்தவரையும் சார்ந்த சூழலையும் பொறுத்து அமைந்து விடுகின்றது. அதனால் தான் 'பெரியாரைத் துணைக் கொள்க' என்று நல்வாழ்வின் நாட்டமுடையோர் அனைவரும் கூறுகின்றனர். 'சேராத இடந்தனிலே சேர வேண்டா' என்கின்றனர். சிரிக்கத் திரிந்து சீரழிய வேண்டாமே” என்பது அவர்கள் நல்லுள்ளம்.

உலகம் முழுவதும் தோன்றிய அறநூல்கள் அறிவு நூல்கள் வாழ்வியல் நூல்கள் ஆகியன “பெரியாரைத் துணைக் கொள்க' என்கின்றன. பெரியாரைத் துணைக் கொள்வதன் சிறப்பை விரித்துரைக்கின்றன. அந்த ஒன்றைப் பெற்றால் ஓராயிரம் நலங்களைப் பெறலாம் என்கினறன. அவ்வாறானால் எப்பாடு பட்டும் பெரியாரைத் துணைக் கொள்ள வேண்டும் என்றும், அப்படிப் பெற வாய்த்த

அளவில்

அத்துணையைப்