உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

65

என ஓங்கி எழுகின்றான்: உழைக்கின்றான் எண்ணியபடியே உணர்வை அடைகின்றான்.

ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வருகிறாள் ஒரு சிறுமி காற்று வேகமா இவள் வேகம் எனப் பாராட்டுப் பெறுகிறாள். அப்பாராட்டு ஒலிம்பிக்கு ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெறச் செய்கிறது

எங்கும் மழையில்லை; விளைவும் இல்லை பசியோ பசியென நாடு தவிக்கிறது. நாட்டுப் பசியெல்லாம் தமக்கே வந்து விட்டதாகத் துடிக்கிறார் ஒரு பெருமகனார். “பசித்தோர் முகம் பார்” எனக் குரல் எழுப்புகிறார். அடுப்பு மூட்டுகிறார். உணவுப் பொருள்கள் வண்டி வண்டியாய்க் குவிகின்றன. மூட்டிய அடுப்பு அணையாமல் மூண்ட பசி நெருப்பு அணைகின்றது. அவர் உள்ளத் துயர்வு வள்ளலார் ஆக்குகின்றது

கல்வி அனையது உயர்வு இல்லையா?

செல்வத்து அனையது உயர்வு இல்லையா

பதவி அனையது உயர்வு இல்லையா?

இவற்றுக்கும் உயர்வு உண்டுதான், ஆனால் இவற்றுக்கு மூலமும் முதலும் ஆகிய உயர்வு, உள்ளத்தனையது உயர்வு என்பதுதான் உள்ளம் உடைமை உடைமை என்பது வாய்மொழி!

ஒருவர் சீரோடும் சிறப்போடும் வாழ்கிறார்; மாற்றொருவர் பேரோடும் பெருமையோடும் விளங்குகிறார்! இன்னொருவர் குடும்பம் நாடு புகழ் பாராட்டுப் பெறுகிறது. இவர்களையும் க்குடும்பங்களையும் அறிந்தவர்கள் “எண்ணம்போல் வாழ்வு” என்றும், மனம்போல் வாழ்வு என்றும் பாராட்டுகின்றனர். இப்பாராட்டு, நெஞ்சில் இருந்து வரும் பாராட்டு: அரைகுறை இல்லாத நிறை பாராட்டு; போட்டி பொறாமை இல்லாத L புகழ்ப்பாராட்டு. பாராட்டப்படுவாரும், பாராட்டுவாரும், பெருந்தக்க வாழ்வுக்கு உரியவர்கள்.

ஒருவர் மிக நல்ல பெண்மணி. குடும்பப்பாங்கு அமைந்தவர்; அறிவறிந்த சால்பினர்; அவர்க்குத் தக்க கணவன் அமைய வேண்டுமே எனப் பெற்றோர் மட்டுமல்லர்; உற்றார் உறவினரும் ஆர்வமும் அக்கறையும் கொள்கின்றனர். அவர்கள் விருப்பப் படியே நல்ல குடும்பத்தில் நல்லியல்பு அமைந்த மாப்பிளையும்