உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இளங்குமரனார் தமிழ்வளம்

18

ஒரு நீர் நிலையில் ஒரு பழம் விழுகின்றது. அது விழுந்தவுடன் ஓர் அலை வட்டம் உண்டாகின்றது. அவ்வலை வட்டம் விரிந்து விரிந்து நீரின் எல்லையளவுக்கும் பரவுகின்றது. அப்படியே உள்ளமும் விரிந்து விரிந்து ஊராக நாடாக உலகாகப் பரவுகின்றது. அவ்விரிவை அருமையாய்ப் பாடுகின்றார் பாவேந்தர் பாரதிதாசனார்.

66

மனிதரில் நீயோர் மனிதன்? மண்ணன்று; இமைதிற; எழுந்து நன்றாய் எண்ணுவாய்;

தோளை உயர்த்து; சுடர்முகம் தூக்கு; மீசையை முறுக்கி மேலே ஏற்று; விழித்த விழியில மேதினிக் கொளி செய்

நகைப்பை முழுக்கு; நடத்து லோகத்தை”

என்ற உள்ளம் உந்தி எழும்பப் பாடுகிறார்.

66

அறிவினை விரிவுசெய் அகண்ட மாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை”

என்று ஆணையிடுகிறார்

66

பிரிவிலை எங்கும்; பேதம் இல்லை

உலகம் உண்ணஉண்; உடுத்த உடுப்பாய்;

புகல்வேன் உடைடமை மக்களுக் குப்பொது;

புவியை நடத்து; பொதுவில் நடத்து”

என்று உள்ளத் தனையது உயர்வு என்பது உறுதி செய்கிறார். நாமும் நடைமுறையில் காண்கிறோமே!

வேலை தேடும் ஓர் இளைஞன் ஒரு பெட்டிக் கடைக் காரரைப் பார்க்கிறான். அவர் முதல் தொகைக் குறைவையும் முயற்சி நிறைவையும் கண்டு மகிழ்கிறான். “நான் ஏன் வேலை இல்லா இளைஞன்” எனத் திரிய வேண்டும். இவரை எடுத்துக் காட்டாகக் கொள்ளலாமே எனத் துணிகிறான்.

எண்ணித்

துணிகிறான்; ஏற்றம்

பெருவணிகனாகப் பெருமை சேர்க்கின்றான்.

எய்துகிறான்;

கற்கும் இளைஞன் ஒருவன் “என் எண்ணம் எங்கள் பள்ளி முதன்மை இல்லை; மாநில முதன்மை: முடித்துக் காட்டுவேன்