உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இளங்குமரனார் தமிழ்வளம்

18

என்பது,கல்லார் எவர்? நல்லது செய்யக் கல்லாரே கல்லார். பிறர் கல்லார் அல்லர் - நல்லாரே.

மனிதனைக் கூடிவாழும் விலங்கு என்பர்; அவன் தனித்து வாழப் பெரும்பாலும் விரும்புவது இல்லை. அத்தன்மை ஒன்றே ‘அரசு’ ‘ஆட்சி' 'நாடு' என்பவற்றைப் படைத்து வளர்த்து வந்துள்ளது.

காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த பழைமை மனிதன், கூட்டம் கூட்டமாகவே அலையவும், தங்கவும் நேரிட்டது. கூடிவாழும் வாழ்வு சிறப்புறப் பொதுநல உணர்வு மிகுதலும். தன்னல உணர்வு குறைதலும் வேண்டும். எல்லாரும் தன்னலத்தைக் குறைத்துப் பொது நல விரிவாளராக ஆகிவிடுவரா? முடியாது. ஆகலின் ஒரு நெறிப்படுத்திய பொதுப்பணிகளைக் கண்காணிக்கத் தலைவன் ஒருவன் தேவைப்பட்டான்.அவன் என்று கண்காணிக்கும் பொறுப்பை மக்களிடத்துப் பெற்றானோ அன்றே கட்டளை இடும் தகுதியையும் பெற்றான். அவன் கட்டளைக்கு அனைவரும் அடங்கி நிற்பதும். செயலாற்றுவதும் முறைமை ஆயின. அவன் ஆணையை மீறுவது முறையற்றது ஆயிற்று. முறையற்றது எனக் கருதப்பெறுபவற்றைச் செய்பவரை அப்படியே விட்டால் வி முறைமை நடைமுறைக்கு வராமலே போகிவிடும் அல்லவா. அதனால் முறைமை தவறுவோர்க்குத் தண்டனை தருதலும் தேவை ஆயிற்று. இத்தேவையே. அரசாகவும், அமைச்சாகவும், அறமன்றமாகவும், படையாகவும், சிறையாகவும் வளர்ந்தது.

சிறிய ஒரு கூட்டத்தை ஆளும் தலைவன் ஒருவன் பெரு வீரனாக இருந்தான் என்றால், அவன் அச்சிறு குழுவை ஆளும் அளவுடன் நிற்க விரும்பாமல், பிற கூட்டத்தவர்களையும் தன் ஆண்மையால் அடிப்படுத்தினான்; அவர்கள் மீதும் ஆணை செலுத்தினான். அவன் ஆற்றலுக்கும் ஆண்மைக்கும் ஏற்பக் குறுநிலப் பரப்பாக்கிக் கொண்டான். இப்படியே குறுநில மன்னர்கள் பெருநில மன்னர்களாகத் தலைப்பட்டனர் என்ன உரிமை கொண்டாடினால் என்ன? ஆண்மை இல்லை என்றால், அடுத்து இருப்போர் துணை ல்லை என்றால், அவன் பரம்பரை உரிமை நிலைக்குமா? வீழ வேண்டியதுதான்! அல்லது நாட்டை விட்டு ஓட வேண்டியதுதான்! இதுதானே அரசர்கள் வரலாற்றில் பெரும்பகுதியாக உள்ளது.