உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

89

ஆனால், இன்று அரசன் என ஒருவன் இலன்; மக்கள் அனைவருக்கும் மன்னர் என்னும் உரிமை உண்டாயிற்று. ஆள்பவர் யார்? ஆளப்படுபவர் யார்? அவர்களுக்காகவே அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆள்வர்; அவர்களே ஆளவும் படுவர்; ஆள்பவர்களும் அவர்களே; ஆளப்படுபவர்களும் அவர்களே! இத்தகைய நிலைமையில் மன்னராட்சி மக்களாட்சியாக -முடியாட்சி குடியாட்சியாக-மாற்றம்அடைந்துள்ளது என்றாலும் இன்னும் வேறு ஒரு வகையான் ஆட்சி வருமானாலும் அரசு என்னும் ஓர் அமைப்பு இல்லாமல் தீராது. பெயர் மாறலாம்; முறை மாறலாம்; எனினும் ஆள்வோரும் ஆளப்படுவோரும் இருக்கவே செய்வர்; அரசும் இருக்கவே செய்யும்.

-

எந்நாளுக்கும் எவ்விடத்திற்கும் பொதுவானது அரசு என அறிந்தோம். அது பொதுமைத் தன்மை பெறுதற்குக் காரணம் என்ன? அது இல்லாமல் உலகம் இயங்காது என்னும் ஒன்றேயாம். அவ்வாறானால், உலகை இயக்கஅது என்ன தகுதியை உடையதாக இருக்கிறது? இவ்வினாவைக் கேட்டுக் கொண்டு வள்ளுவப் பெரியாரிடம் சென்றால் அவர் வாய்த்த வகை காட்டுகிறார்.

66

66

66

அறநெறியை உயிராகக் கொண்டது அரசு

குற்றங் குறைகளைக் கடிவது அரசு'

99

முறைமை அமைந்த வீரத்தால் மக்களைக் காப்பது அரசு

என்று வகுத்துரைக்கிறார்.

66

அறன் இழுக்கா(து) அல்லவைநீக்கி மறன்இழுக்கா மானம் உடைய(து) அரசு

என்பது அவர் தம் வாயுரை!

99

உயிரற்ற உடல் பேரினை நீங்கிப் பிணமெனப் பேர் பெறும். அறநெறி பேணாத அரசும் தன் பேரினை நீக்கிப் பேய்ப் பெயர் கொள்ளும் “பேயரசு செய்தால்? - பிணம் தின்னும் அறநெறி!” ஆதலால் எடுத்த எடுப்பிலேயே - அரசியல் கூறிவந்த வள்ளுவர் - அறநெறியைக் குறிப்பிடுகிறார்

அறம் என்பது என்ன?

மனத்துக்கண் மாசின்மையே அறம், மனமாசு இல்லாத இடத்துப் பொறாமை, ஆசை, கோபம், கொடுஞ்சொல்,