உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இளங்குமரனார் தமிழ்வளம்

18

கா

பொய்ம்மை, கொலை என்பவை உண்டாமோ? உண்ட வன்றே! இவை அற்றதே அறம். இத்தகைய அறத்தை உயிரெனக் கொண்டதே அரசு எனின், அவ்வரசின் கீழ் வாழ்வார்க்குக் குறைவேதும் உண்டோ?

அறம் ஆட்சி கொள்ளும் நாட்டிலே முறை கடந்த நெறி தவறிய செயல்கள் தலைகாட்டுமோ? ஆள்பவர் அறநெறி பேணுவர் என்றால் அவர்தம் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் அறநெறி பேணாமல் முடியாதே. “ஆள்வோர் எப்படி மக்களும் அப்படி” என்பது பழமொழி. முறைதிறம்பா ஆட்சி செலுத்தும் நாட்டில் தானே முறை தவறிநடப்பார்க்கு - குற்றம் புரிபவர்க்குக் கொடுந்த தண்டனை கொடுக்கப்பெறும் நல்ல உழவன் அல்லனோ, கண்ணும் கருத்துமாக இருந்து களை பறித்து எறிபவன்? ஆதலின் அறநெறி அரசியல் ஆளும் அதிகாரிகள் இடத்தும், ஆளப்படும் மக்கள் இடத்தும் குறைகள் கிளம்பா. ஒருவேளை கிளம்பினாலும் னுக்குடன் களைந்தெறியப் படும். அவ்வாறு களைந்து எறிதலில் - களை பறிப்பதில் கருத்துச் செலுத்தாத அரசு அறநெறி அரசு' எனத் தன்னைக் காட்டிக் கொள்ளுமாயின் பழுத்த பொய்ந்நாடகம் நடிக்கிறது என்பதே பொருந்தும்!

உட

-

குறை நீக்கும் நோக்கம் ஆள்வோர்க்கு உண்டென்றால், குறை நீங்கியவர்கள் அவர்கள் என்பது ஆளப்படும் மக்களுக்குத் தெளிவாக வேண்டும். அத்தெளிவு இருந்தால் அல்லாமல் மக்கள் வெள்ளம்ஆட்சிஅணைக்கு அடங்கி அமைந்துகிடப்பது இல்லை.

திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழன் மனுவின் புகழ், மதுரை மாநகர் அறமன்றத்தில் பாண்டி வேந்தன் முன் பாராட்டிப் பேசப்படுகின்றது ஏன்?

-

இளவரசன் ஏறிச்சென்ற தேர், எதிரே வந்த இளம்பசுக்கன்றின் மேல் ஏறியது; அவ்விடத்திலேயே இறந்தது. பசுக்கன்றுதானே என்றோ, கொன்றவன் இளவரசன் என்றோ மன்னன் அறநெறி கடந்தான் அல்லன். கன்று இறந்த இடத்திலேயே, தன் பசுங்குதலை மைந்தனைக் கிடத்தித் தானே அவன்மேல் தேரைச் செலுத்திக்கொன்றான். அறம்பெரிதா?ஆட்சிக்குரிய மகன் பெரியனா? என்னும்வினாக்கள் மன்னன் முன் நின்றன.“அரசுக்குரிய ஒரு மகன் இறந்தாலும் இறக்கலாம்; அவன் இருக்கவேண்டுவதே அறநெறி காப்பதற்குத் தானே, அவ்வறநெறியைக் கொன்று ஆள்பவனாக அவன் வருதலினும், அவனைக் கொன்று அறநெறியை வாழ