உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

91

வைப்பதே முறைமை” என்றது மனச்சான்று. அவ்வாறே மைந்தன் உயிரைப் போக்கி மாறா அறத்திற்கு உயிரூட்டினான். மனுச்சோழன் என்னும் மாண்புடைய அம்மன்னன் நடுவுநிலை அறத்தை அறியார் யார்?

தங்கள் குறையகற்றி வாழ்தல் தம் குடிமக்களிடத்துக் குறையகற்றி இனிது ஆள்தல். இவ்வளவுடன் அரசின் கடன் ஒழியுமா?

இனிய வாழ்வைக் கெடுக்கும் இன்னாப் பகைவர் எக்காலத்தும் எவ்விடத்தும் உளரன்றோ? அவர்களை என்ன செய்வது? மண்ணாசை கொண்டோ, மாறுபாடு கொண்டோ மார் தட்டிக்கொண்டு தாக்க வரும் பகைவரைக் கண்டு பரிவு காட்டுதல் தகுமா? ஆட்சியே உயிரெனக் கருதித் தம் உழைப்பால் பெறும் பயனின் பெரும்பகுதியை ஆட்சிக்கு வரியெனத் தந்து வாழும் குடிமக்கட்குத் தக்க பாதுகாப்புச் செய்ய வேண்டாமா? மக்கள் நலங்கருதிய பொதுக்கடமைகளைப்புரிதற்கும்,அச்சமின்றி

னி

து வாழ்தற்கும் ஆகவன்றோ ஆட்சி ஏற்பட்டது. அதனை நிறைவு செய்யா அரசு அரசு ஆகுமா?

பகைவரோடு நிற்கும் போர்க்களத்திலும் அறநெறிபேணுவதே பழந்தமிழர் வழக்கு, வஞ்சம் சூது இல்லாமல் தாக்குதல் தீயவரை வெறுக்காமல் தீய தன்மையை மட்டும் வெறுத்தல், காலமும் இடமும் குறித்துத் தாக்குதல், ஒத்த வலிமை உடையாரையே தாக்குதல், தாக்க வருவாரை மட்டுமே, தாக்க நிற்கும் வேளையில் மட்டுமே தாக்குதல். இவ்வாறாக அறப்போர் புரிந்தனர்.

போர்க்களத்தில் ஆற்றல் காட்டிப்போரிடுவதும்,பாசறையில் அன்பு காட்டிப் பழகுவதும் அக்காலச் சூழ்நிலையில் எளிய நிகழ்ச்சிகளாகவே இருந்தன. இவ்வாறாக அறநெறிக்குப் புறம் போகாத ஒன்றே ஆண்மை என்றும், பேராண்மை என்றும், மானம் என்றும் போற்றப் பெற்றன.

66

‘அறநெறியை முதலாகக் கொண்டதே அரசரது வெற்றி; அதனால் இவர் நம்முடையவர் எனக்கருதி அவர் செய்த கொடுஞ்செயலைப் பொறுத்தலும், இவர் நமக்கு அயலார் எனக் கருதி அவர் செய்த நல்ல செயல்களைப் பாராட்டா திருத்தலும் கூடா” என்று பைந்தமிழ்ப் பாவலர் மதுரை மருதனிள நாகனார் வலியுறுத்தும் உரை பல்காலும் நினைக்கத்தக்கது. வ்வுரை ஆட்சி அறததை எடுத்துக் காட்டத் தக்க சான்றாம்.

"