உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. ஒரு குறள்

ஒரு குறள்' என்பது ‘ஒரே ஒரு குறள்' என்பதையும் குறிக்கும். ‘ஒப்பற்ற குறள்' என்பதையும் குறிக்கும்.

“அழுக்காறு என ஒரு பாவி” என்பதிலுள்ள ஒரு ஒப்பற்ற இணையில்லா, ஈடில்லா என்னும் பொருளதேயாம். ஒப்பில்லா மேன்மைக்கு ஒரு குறள் என்றால், ஒப்பில்லாக் கீழ்மைக்கு அழுக்காறு அடைமொழிதான் உயர்வுக்கும் ஆகும்; தாழ்வுக்கும் ஆகுமே!

குறள்' என்பது யாப்பின் பெயர். அவ் யாப்பின் பெயர், குறுவெண்பாட்டு என்பது, ஏழு எழுத்து முச்சொல். மூன்றெழுத்து ஒரு சொல்லாய்க் ‘குறள்’ வடிவு எய்துகின்றது.

குறளடி என்னும் பெயர் தொல்காப்பியத்தில் உண்டு. ‘குறட்பா’ ‘குறள்' என்பவை ஆங்கு இல்லை.

புறநானூற்றில் ‘குறள்’ உண்டு, அது உடற்குறை வகையுள் ஒன்று (28) குறுவெண்பாட்டைக் குறளாக்கி, அதனை நூற் பெயராக்கி வைத்த கொடை வள்ளல், வள்ளுவரே எனல் தகும். அவரும் ‘குறள்' என்னும் சொல்லை நூலினகத்துச் சுட்டினாரும் அல்லர். நூற் பெயராகவே அமைத்தார்.

அக்குறள் என்பதைப் பின்னவர் கொண்ட மதிப்பால் ‘திருக்குறள்’ ஆக்கிப் பெரிது படுத்தினர்.

‘குறள்' என்பது ஒரே ஒர் ஆசையால் அனது. ஆம்! ஒரே ஒரு நிரையசை. ஓரசையால் இப்படித் தமிழ்ப் பரப்பில் ஒரு நூல் உண்டோ? இல்லை ‘ஏலாதி' என்னின் மூன்றெழுத்து மூவசைச் சொல் ஆயிற்றே! பிறிதொன்று எது?

குறளின் நயமும் சுருக்கமும் விரிவும் எல்லாம் குறள்’ என்னும் பெயரமைதியிலேயே அமைந்த திறம் இது!