உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

66

புயற்காற்றுச் சூறை தன்னில் திடுதிடு என மரம்

93

விழுந்து காடெல்லாம் விறகான செய்தி போலே வீழ்ந்தான்!

வினை விதைத்தவன்! வினைஅறுத்தான்!

தமிழ்ப்பாட்டி உரைத்தாளே. ‘குடியுயரக் கோலுயரும்’ என்று எவ்வளவு பொருள் பொதிந்த மொழி. குடிகளை அழித்தான். கோல் அழிந்தான்! - இது சார் ஆட்சிக்கு மட்டுமன்று. எவர் ஆட்சிக்கும், எந்நாட்டு ஆட்சிக்கும் எத்தகைய ஆட்சிக்கும் பொதுவானது. குடியாட்சி. எனப் பெயர் பெறும் ஆட்சிகளும், இனிப் புதிதாக எம் முறையிலேனும் தோன்றுமாயினும் அவ்வாட்சி நெறிகளும் இவ்விதிக்கு விலக்காகா. ஆதலால், இதனை அரசியல் தொடக்கத்திலேயே - எடுத்த எடுப்பிலேயே வலியுறுத்த வேண்டியது அறவோர் கடன்.அக்கடப்பாட்டையே செவ்வையாக நிறைவேற்றுகிறார். நயமறிந்து உரைக்க வல்ல நாவலர் வள்ளுவர். “அரசு நிலைக்க வேண்டும்; மக்கள் திளைக்க வேண்டும்” என்னும் கனிந்த நெஞ்சர் அவர். அக்கனிவின் முத்திரை.

66

அறன் இழுக்கா(து) அல்லவை நீக்கி மறன் இழுக்கா மானம் உடைய(து) அரசு” என்பது

அறநெறியில் தவறாமை. அறமல்லாதவற்றை ஒழித்தல், முறைதவறா வீரப்பேறு, இவற்றைக் கொண்டிருப்பவரே ஆள்வோர்: அவர்களால் ஆளப்படுவதே அரசு என்பது இதன் பொருள்.