உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

இளங்குமரனார் தமிழ்வளம்

18

வொட்டாமல் கிடைத்த பொருளிலேயே உயர்ந்த எண்ணத்தை உண்டாக்குகிறது. மதிப்பை உயர்த்துகிறது; அப்படியே பதிய வைக்கச் செய்கிறது.

கை நீளமானவர் சிலபேர், மிடுக்கோடு முக்குளிபோட்டு மூழ்கி மூழ்கித் துழாவினர். மண்ணை எடுத்து வந்தனர் சிலர்; பொன்னை எடுத்து வந்தவர் சிலர்; மணியை எடுத்து மகிழ்ந்தவர் சிலர்; இவ்வண்ணம் குறளோடையின் அடித்தளத்தில் உள்ள அரும் பெறற்பொருள்களைத் தருமர், மணக்குடவர், முதலிய நீர் மூழ்கிகள் அடித்தளம் வரையிற் சென்று அகப்பட்டதை எடுத்துக் கொண்டுவந்து பரப்பி அதன் அருமையை எடுத்துக் காட்டினர்.

தகுதிவியத்தல் - தண்டபாணியார் பக்.16

திருக்குறள் விடு தூது என்பதொரு புது நூல்: அது கழக ஆட்சியாளராக விளங்கிய தாமரைச் செல்வர் வ.சுப்பையா அவர்கள் மேல் பாடப்பட்ட நூல். அதில்.

எண்ணில் எழுசீரே என்பார்கள் மெய்யாக எண்ணில் எழுசீரே என்பதனை ஓர்வார்கள்: எண்ணப் பெருகியெழும் எண்ணத்தை யாராலும் எண்ணற் கியையுமோ எண்மையாய்! எண்ணரியாய்! கண்ணுட் குறும்பாவை காணும் கடலென்ன எண்ணுட் படுதற்கும் எட்டாப் பெருந்தக்காய்! நேரசையோ அன்றி நிரையரையோ உன்னிடத்தாம் ஓரசையும் ஓருலகாய் ஓங்க ஒளிர்மாண்பே! “வேட்ட பொழுதில் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோளென்னும் இன்புரைக்குக் காட்டாய் இலங்கும் கவின் பொருளே! காலமெலாம் தேட்டாய்க் கொளத்தக்க தேர்ச்சித் திருத்துணையே! ஆர்வத்தால் கற்பார் “அறிதோ றறியா ம

நேர்வரென நேர்ந்தசீர் நின்னுரைக்கு நேர்சான்றோ! நாடி “நவில்தொறும் நூல்நயம்’” நண்ணற்குக் கூடிச் செறிந்த குறையாத பேரேடே!

மூத்த தமிழ்க் குடியின் மூவா வளச்சுடரே

யாத்த அறவாழ்வே! யாண்டைக்கும் ஆம் சுரப்பே!