உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

வற்றாப் பெருக்காறே வாடாக் களஞ்சியமே! கற்றார்க் கமைந்த கருவூலக் காப்பகமே பாட்டுள் பயின்று பலகாலும் நின்றுபின்

கூட்டுள் அமுதாகிக் கொஞ்சும் கொடைவாழ்வே! வாட்டும் அனற்கோடை வாழ்வை இளந்தென்றல் ஊட்டும் நிலாமுன்றில் ஆக்கும் ஒளிப்பேறே! கற்பார் தமையெல்லாம் காதல் மகவாக்கி நற்பால் நயமூட்டும் நாடறியாத் தாய்வடிவே! வையத்துள் வாழ்வாங்கு “வாழ வழிகாட்டித் தெய்வத்துள் வைக்கத் திறஞ் சொல்லும் தெய்வமே!”

என நீள்கிறது.

99

திருக்குறளின் சிறப்புகள் மிகப்பல. அவற்றுள் ஒன்று அச்சுச் சட்டம் என ஒரு தடைச் சட்டம் 1835 வரை இருந்தும் அதனையும் மீறி 1812 இலேயே வெளிவந்த தமிழ் முதல் நூல் அது. அதனை வெளியிட்டவர் நெல்லை அம்பலவாணக் கவிராயர்.

வெளி வந்த அதே ஆண்டிலேயே எல்லிசு என்பாரின் உரைப் பதிப்பு ஒன்றும் வெளி வந்தது.

சரபோசி மன்னர் கல்கத்தாவுக்குச் சென்று அந்நாள் துணையரசரைக் கண்டபோது அவர் திருக்குறள் பற்றி வினாவிய வினவே சரசுவதிமால் என்னும் சுவடிச்சாலையாகக் கிளர்ந்தது.

ப்

ன்னா செய்யாமைக் கொள்கையைத் தால்சுதாய் மேற்கொள்வதற்குத் தூண்டுதலாக இருந்தது திருக்குறள் பிரெஞ்சு மொழி பெயர்ப்பே. அம் மொழிபெயர்ப்பே தால்சுதாய் காந்தியடிகளார்க்குநினைவூட்டப் பெற்று, அதன் மூல மொழியிலே பயில வேண்டும் என்னும் ஆர்வத்தைக் கிளப்பித் தமிழைக் கற்க அடிகளை ஏவிற்று. அம்முருகிய ஆவலே அடிகளைத் தமிழ்ப் பிறப்புப் பிறக்க வேண்டும் என்னும் அவாவையும் எழுப்பிற்று.

திருக்குறள் வெள்ளித் தட்டத்தில் வைக்கப்பட்ட பொன் ஆப்பிள் என்று பாராட்டவும் தாசுமாலில் ஒரு கல்லைப் பெயர்த்து அப்பெயர்ப்புப் புலப்படாமல் வைத்தாலும் வைத்து