உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

இளங்குமரனார் தமிழ்வளம்

18

விடலாம் ஆனால் திருக்குறளில் ஒரு சொல்லைப் பெயர்த்து அப்பெயர்ப்புப் புலப்படாமல் ஒரு சொல்லை வைத்துவிட முடியாது என்று வியந்தேத்தவும் படுவதாயிற்று.

உலகப் பெருஞ் - சிந்தனையாளர் இங்கர்சால், தம் பொழிவுத் தொடக்கத்தில் "எப்பெருள் யார் யார் வாய்' “எப்பொருள் எத்தன்மைத்து” “அறிவு அற்றம் காக்கும் கருவி” என்னும் குறள்களை முன் வைத்துச் சொல்லத்

தூண்டியதெனின் அதன் சிறப்பியல் விளங்கும்.

மாந்தனுக்குத் தன்னம்பிக்கையூட்டி மேலே செலுத்துவதில் திருக்குறளுக்கு ஒப்பானதொரு நூல் உலகில் இல்லை என்று பெருந்தகை ஆல்பிரட்டு சுவைட்சரும், திருக்குறள் பிறந்த மண்ணில் போல் அறநெறி ஈதென உரைப்பது தக்க தாகாது என்று பேராசிரியர் போப்பையரும் கூறிய பெருமையது.

'என்னைக் கவர்ந்த குறள்' என்னும் தலைப்பில் ஒரு குறளைப் பற்றி எழுத என்னை வேண்டினார் ஓர் இதழாசிரியர். என்னைக் கவராத குறள் எதுவும் இல்லை' என்று சொல்லி எழுதுதல் தவிர்ந்தேன்.