உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. வள்ளுவம் காட்டும் வாழ்வியல்

வள்ளுவர் தனிப் பொது நெஞ்சம் யாது?

செயல், செயல், செயல்

'சொல்லுவது செயலுக்கு வர வேண்டும். செயலுக்கு வருமாறு சொல்ல வேண்டும்' என்னும் ஒர் அடிப்படைக் கருத்தினைத் தம் நெஞ்சில் நீள இருத்திக் கொண்டே குறள் எழுதியவர் வள்ளுவர். செயல் அடிப்படையை யாண்டும் மறவா உளத்தினர் அப்பெருமகன். ஆதலால் செயலே வள்ளுவம் எனச் செய்க.

66

'குறள் கற்பேன்: நிற்பேன்: நிற்கக் கற்பேன்: குறள் வாழ்வு வாழ்வேன்: வள்ளுவர் ஆணை என்று எண்ணுமின் எண்ணத் திட்பங் கொள்ளுமின் என்பவை மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனார் எழுதிய வள்ளுவர் நெஞ்சமாகும் (வள்ளுவம் பக் 26.34)

வள்ளுவம் வழிபட எழுந்த நூல்அன்று: வழிப்பட்டு நடக்க எழுந்த நூல்.. வள்ளுவம் மேற்கோள் காட்ட எழுந்த நூல் அன்று: வாழ்வில் மேற்கொண்டு ஒழுக எழுந்த நூல். வள்ளுவம் ஒப்பிக்க எழுந்த நூல் அன்று: ஒப்பிலா ஒன்றாகக் கொண்டு ஒழுகக் கிளர்ந்த நூல்.படிப்பாளியைப் படைப்பாளி நிலைக்கு உயர்த்த எழுந்த நூலைப் படிப்பு நூலாக மட்டும் கொள்ளாமல் அப்படியே காட்டும் படிவ நூலாகக் கொள்ளல் வழிபடுவார், மேற்கோள் காட்டுவார். ஒப்பிப்பார், படிப்பார் கடமையாகும். அதுவே, வள்ளுவர் நெஞ்சம் உணர்ந்த நேரிய செயலாகும்.

இயற்கை உலகைச் சுட்டி இயக்கும் இயவுளாம் இறைமையைக் காட்டி அவ்விறைமைப் பண்புகள் இவையென நாட்டி இறைமையை வாழ்த்துகிறார்.