உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

இளங்குமரனார் தமிழ்வளம்

18

மாந்தர் வாழ்வுக்கும் உயிர்கள் உய்வுக்கும் அடிப்படை அமிழ்தமாம் வான்சிறப்பை அருளிறையின் ஒழுக்காக நிலைப்படுத்துகிறார் வள்ளுவர்.

உலக இயக்கப் பண்பாடு உயர் சான்றோர் வழியது என்றும், தந்நல மற்றுப் பொது நலமுற்ற அவர்களே கண்ணேரில் நின்று உலகைக் கண்ணோட்டத்துடன் காப்பவர் என்றும் உணரச் செய்து, மனத்துக்கண் மாசிலா அறப்பயனை வலியுறுத்தத் தொடங்குகிறார்.

அறன் இன்னதெனக் கூற அவாவிய அவர், அறத்தால் பொருள்தேடிஅப்பொருளால் இன்புறுதல் என்பதை அறியுமாறு முப்பால் வைப்பை முறையாகப் போற்றுகிறார். அறத்தை வாளா கூறாமல் வலியுறுத்திக் கூறுகிறார். ஆம் இடித்தும் கூறுகிறார்: அடித்தும் கூறுகிறார்; வாயறை அறைந்தும் கூறுகிறார். கையறை அறைந்தும் கூறுகிறார். அவ்வலியுறுத்தலை எந்நிலையோர்க்கும் பொருந்தவும் உரைக்கிறார்: கால இட வேறுபாடு காண ஒண்ணா வகையிலும் கூறுகிறார்.

எப்பாலோர்க்கும்

வள்ளுவர் ஒரு சிறிய குடும்பத்தைக் காட்டி, கோடி கோடியாக விரிந்துள்ள வியனுலகப் பரப்புக் கெல்லாம் விரிக்கின்றார். தாம் தம் நூலை நாடக உத்தியில் தொடங்கு கிறார், ஏன்?

மங்கல விழாக் கோலத்துடன் மணமேடையிலேயே தொடங்கி மணமகனுக்கும் மணமகளுக்கும் கற்றத்திற்கும் அறமாண்மைத் திறமாகக் கூறுகிறார் கடைப்பிடியர்க்கு வாய்க்கும்பேற்றை

66

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்

وو

என வாயுறை வாழ்த்தாகவே வழங்குகிறார்.

வள்ளுவக்

மணமகளே! மணமகளே!! இந்நற் பொழுதிலே மகிழ்வுப் பொழுதிலே மறவாமல் எண்ண வேண்டிய வாழ்வியல் செய்திகள் உண்டு. அவற்றுள் தலையாயது ஒன்று. அது உன்னைத் தந்த தந்தை, உன்னை ஆக்கிய தாய், உனக்கு உயிர்த்துணையாக ப்பொழுது உன்னோடு வந்து ஒன்றாகி உடனாகி உயிராகி