உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

103

இருக்கும் துணை. இம்மூவரையும் நீ வாழும் நாளெல்லாம் நிலைபெற்ற துணையாக இருந்து பேணிக் காக்க வேண்டும்.

உன் பெற்றோர் எத்தகையர்? உன் உயிர்க்கும் உடற்கும் உணர்வுகளுக்கும் அறிவு பண்பாட்டு நலங்களுக்கும் மூலவர்கள் அல்லரோ. அவர்கள் தாமே உன் நலங்களுக்கெல்லாம் வைப்பகமும் காப்பகமுமாக இருந்தவர்கள். அத்தொடர் நிலை வாழையடி வாழையாக வாய்ப்பதற்காகத்தானே ஒர் உயிர்த்துணை இன்று உன்னோடு இணைந்துள்ளது. அத்துணையைப் பேணிப் போற்றும் அளவு எவ்வளவு. அவ்வளவு உன் குடும்பம் உயரும்: குலம் உயரும்: உலகம் நலம் பெறும்.

ஊடி

இனிய மணமகனே, நீ நீடு வாழ வேண்டும்: நீ தும்மும் போது கூட நீடுவாழ்க என்பவள் உன் துணை தான். நின்றாலும் கூட உனக்குத் தும்மல் வந்தால் தன்னை மறந்து உன்னில் தோய்ந்து “நீடுவாழ்க” என்று வாழ்த்தி நாணி நிற்பவள் அவள். உன் உயிர் தளிர்க்கச் செய்ய வாய்த்தவள்-வந்தவள் அவள்.

அவள் எலும்பால் தோலால் சதையால் நரம்பால் குருதியால் நீரால் அமைந்தவள் என எண்ணாதே. உன் உயிர் தளிர்க்கச் செய்யும்; அழுதால் செய்யப்பட்டவள் என்பதை அறிக. அவளே உனக்கு வேண்டுவ வேண்டுவவெல்லாம் வழங்கும் கற்பகம். அவள் சிறப்பே உனக்கு ஊர் வழங்கும் சிறப்பு. அவள் வழங்கும் இனிய கொடையே மக்கட்பேறு. அம்மக்களின் உடல்-உரை-செயல் எப்படிப் பட்டவை?

அமிழ்தம் தந்த அமிழ்தம் என்றால் அதுவும் அமிழ்துதானே! அது தொடுதலும் அமிழ்து: அது மொழிதலும் அமிழ்து: அது வழங்கும் உணவும் நீரும் அமிழ்து. அமிழ்திலே திளைக்கச் செய்து ஆருயிர் தளிர்த்தோங்கச் செய்யும் அமிழ்து!

அந்த அமிழ்து உன் சொத்தா? ஆம், உன் சொத்துத் தான்! அந்த மிழ்து உன் குல இன நாட்டு மொழிச் சொத்தா?

ஆம், இவற்றின் சொத்தும் தான்! ஆனால் இவ்வளவில் நின்றால் என்ன பயன்?

பெறுமவற்றுள் யாமறிந்த பேறு மக்கட்பேறே' என

வாழ்த்தி என்ன பயன்?