உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இளங்குமரனார் தமிழ்வளம்

18

பழிபிறங்காப் பண்பின் மக்கள் வழி வழி வர வேண்டும் என்று பாடு கிடந்து பெற்றதன் பயன் என்ன?

ஆன்றோர் அவையிலும் சான்றோர் அவையிலும் 'வல்லாண்மையர் வளமையர் அறவர் அருளர் அவைகளிலும் முந்தியிருக்கச் செய்ததன் பயன் தான் என்ன?

உன் குடியளவில் நிற்கவா? சான்றோர் புகழும் சொல்லைக் கேட்டுத் தான் மட்டும் தளிர்த்தலா தந்தையும் தாயும் ஆகிய உங்கள் க மை

உங்கள் மக்களை உயர் அறிவர் ஓங்கிய பண்பர் ஆக்குவது உலகுக்காக அல்லவோ எதிர்கால உலகத்தின் மேதக்க பாருளையல்லவோ உங்கள் திருவயிறு வாய்க்கப் போகிறது? மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

66

நன்கலன் நன்மக்கட் பேறு

தம்மில் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது”

என்பவற்றை எண்ணுக என்கிறார்.

L

66

மணமகளை நோக்கிக் கூறுகிறார். மணமகளே! மணமகளே! இல்வாழ்வான் பெற்றோர்க்குத் துணை உனக்குத் துணை என்றேன். அவ்வாறானால் அவனுக்கு நீ துணை என்பதும் தெளிவுதானே. நீ அவனுக்கு எப்படித் துணை?

நீயே மனைத்தக்க மாண்புத் துணை: கணவனுக்குத் துணை: அவன் நிலை அறிந்து உதவும் வாழ்வுத் துணை!

நீயே குடும்பத்துக்குக் காலத்தால் உதவும் மழை போன்றவள், வேண்டும் என்னும் போதில், வேண்டியவாறு பெய்யும் மழை போன்றவள்.

தன்னைக் காப்பவள் நீ! தன்னைக் கொண்டவனைக் காப்பவள் நீ! உயர் புகழுக்கு இடமானவள் நீ! கடமையிற் சோர்வில்லாத காரிகை நீ!

உன்னைக் காக்கச் சிறை வேண்டுமா? உன் நிறை காவல் முன் சிறை யெல்லாம் தூள் தூள் அல்லவா?

உன்னைப் போலவே உயர் குணங்கள் எல்லாமும் அமைந் தானே உன் துணை, உங்கள் வாழ்வு தானே மண்ணிலேயே விண்ணகமாகத் திகழும் வாழ்வு: