உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

105

உன் நடைமென் நடை! உன் நகைப்பு மெல்லிது! இனியவே கூறும் இயற்கை! விருந்தோம்பு விழுப்பம்! பழியறியாப் புகழ் வாழ்வு!

மக்களைப் பெற்ற பேறுடைமையில் மகிழ்பவளா நீ!

இல்லை! இல்லை!! மேலோர் புகழும் மேலாம் மக்களைப் பெறுதலும், மேலோர் பழிக்கும் செயல் புரியா மேலாம் மக்களைப் பெறுதலும் அல்லவோ நோன்பெனக்

கொண்டனை!

உன் வயிறு பசித்துக் கிடக்கும் நிலையிலும், உன் வயிற்றுப் பிறந்த பிறவி, உன் வயிற்றுப் பசியைத் தீர்ப்பதற்காக மாறான வழியில் பொருள் தேடுவதையும் விரும்பாத மாசிலா மணி அல்லவோ நீ! பழிச் செயல் செய்யும் நிலையில் தான் பெற்ற மகன் என்று எண்ணி அதனைப் பொறுத்துக் கொள்ளாப் புகழ்ப் பிறப்புக் கொண்டவள் அல்லவோ நீ! உன்னினும் பெருமைப் பிறப்பு ஏதேனும் உண்டோ? இல்லையே!” என்கிறார்

இனி மக்களை நோக்கிச் சொல்கிறார் வள்ளுவர், னி மணவிழாவுக்குப் பெற்றோர் கூட்டம் வருவது போல மக்கள் கூட்டமும் வரத்தானே செய்யும்!

மக்களே! மக்களே! நீங்கள் தாமே வருங்காலக் கணவன் மனைவியர்! நீங்கள் தாமே வருங்காலப் பெற்றோர்! கணவன் மனைவியர்க்கும் பெற்றோர்க்கும் இன்று சொல்லியவை. உங்கள் வருங்காலத்திற்கு உரியவை அல்லவா! இவ்வுயரிய மக்களைப் பெற இவர் பெற்றோர் என்ன பேறு பெற்றனரோ என்று உலகம் புகழ உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் அல்லவோ!

நீங்கள் கற்பன கற்றல் வேண்டும்! குற்றமறக் கற்றல் வேண்டும் : கற்றபடி நிற்கக் கற்றல் வேண்டும்!

செல்வத்திற் செல்வம் கல்விச் செல்வம் அல்லவா! தோண்டத் தோண்ட ஊறும் ஊற்றுப் போல ஊறுவது அல்லவோ, எந்நாடும் தம் நாடாய், எவ்வூரும் தம் ஊராய் ஆக்கும் கல்வி

கல்வியைக் காலமெல்லாம் கற்கவேண்டும் அல்லவோ ஒருமுகப்பட்டு நீங்கள் கற்றால் என்றென்றும் கை கொடுத்து. உதவும் கருந்தனமாக அல்லவோ அமையும் அது!