உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

இளங்குமரனார் தமிழ்வளம்

கல்லாப் பிறவி ஒரு பிறவியா?

18

கல்லாப் பிறவி களர் நிலம் போன்ற பிறவி அல்லவா! கல்லாதார் எவ்வளவு அழகராய் இருந்தாலும் என்ன? மண்ணால் செய்த பொம்மைக்கும் கூட அழகு இல்லையா? கல்லாதவரும் கூடக் கற்றாரை அடுத்துக் கேட்கலாமே நல்ல செய்திகளை?

எந்த அளவு கேட்டாலும் அந்த அளவு நலம்தானே.

ஆற்றுப் பெருக்கு அற்ற நாளில் ஊற்றுச் சுரப்பு உதவுவது ல்லையா? அதுபோல் கல்வியால் பெறமுடியா அறிவையும் கேள்வியால் ஓரளவு பெற்றுக் கொள்ளலாமே,

வழுக்கல் நிலத்தில் நடப்பார்க்கு ஊன்றுகோல் உதவுவது போல் உதவுமே, உயர்ந்த கேள்விச் செல்வம்

கல்விஅறிவு-கேள்வி அறிவு- உண்மையறிவு-பட்டறிவு- என்பனவெல்லாம் என்ன பயன் செய்வன?

உண்மையை உணர்த்தும் தெளிவை ஆக்கும்! போன போக்கில் மனத்தைப் போகவிடாது தடுத்துக் காக்கும் அவ்வறிவுதானே, வருவதை உரைக்கும்: எதிரதாக்காக்கும்; அதிரவருதலை அகற்றும்; அஞ்சாமையை ஆக்கும்! உலகம் உவப்பச் செய்து உலகாக ஆக்கும்.

“உள்ளம் உடைமை உடைமை" என்பதை அறிவு தானே நிலைநாட்டும்!

அந்த அறிவே, பிறிதின் நோயைத் தன் நோயாகக் கருதச் செய்து உதவும்!

அந்த அறிவே, ஊருணி நீர். ஊருக்குப் பொதுவாக உதவுவது போல், ஒப்புரவுக்குப் பயன்படும்” என்கிறார்.

ஒவ்வொரு

குடும்பமும்

இவ்வாழ்வியலைக் கடைப்பிடியாகக் கொண்டால், இவற்றின் கூட்டமைப்புத் தானே உலகம்! உலகமே வீடுபேற்று நிலையமாக உறையுளாகத் திகழும் அல்லவோ!

-

இன்ப