உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. திருக்குறள் வாழ்வியல் உரை

திருக்குறளை வாழ்வியல் நூலாகப் போற்ற வேண்டும்: அவ்வாறு கொள்ளாமல் இலக்கியமாக-மேற்கோள் நூலாக- ஆய்வு நூலாக இன்ன பலவாகக் கொள்ளலில் எப்பயனும் இல்லை.

66

-

வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்

என்ப து இல்வாழ்வின் நிறைவுக் குறளாக இருக்கும் ஒன்றே இதனை மெய்ப்பிக்கும்.

66

மண்ணை விண்ணுக் கொப்பென

மாற்றும் தூயன் வள்ளுவன்

வண்மை நூலைத் தம்பியே

வாழ்க்கைப் பேறாய்க் கொள்ளுவாய்"

என்பது மாணவ நிலையர்க்கு வலியுறுத்தும் வலியுறுத்தல்,

66

வள்ளுவம் பரவ வேண்டும்.

வாழ்வியல் துலங்க வேண்டும்”

என்பது கடந்த நாற்பான் ஆண்டுகளுக்கு முன் தொட்டுத் தொடர்ந்து மேடை தோறும் யான் கூறிவரும் பாட்டாகும். இவ்வுணர்வொடு, குறளாயம் கண்டவரும், வரும், குறளியம் கண்டவரும் நம்மறை நம்பியரும் ஆகிய வேலா தொடர்பால் “வாழ்வியல் உரை” காணவாய்ந்தது.

அவ்வுரை வாழ்வியலை முன்வைத்தே வரையப் பெற்ற

உரையாகும்.

"ஒருவர் இறந்தபின் என்ன ஆவார் என்று வள்ளுவர் கூறுகிறார்?” என னாவிய ஒருவர்க்குப் ஒருவர்க்குப் பாவேந்தர், செத்தவனுக்காகத் திருவள்ளுவர் நூல் எழுதவில்லை;

66