உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

இளங்குமரனார் தமிழ்வளம்

18

வாழ்பவனுக்காகவே எழுதினார்” என்று மறுமொழி உரைத்தார் என்பது நினைவு கூறத்தக்கதாம்.

வாழ்வியல் நோக்கில், ஏறத்தாழ 130 குறள்களில் பிறபிற உரைகளொடும் சிறிதும் பெரிதுமாகப் புதுவதாம் உரை கொண்டது எம் வாழ்வியல் உரையாகும். இதனைக் குறளாயமே வெளியிட்டது ஆண்டு 1990.

இவண் அவ்வுரைச் சான்றாகச் சில குறள்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. முற்றிலும் புதுவது என ஒருவர் ஒரு கருத்துக்குத் தம்மை முன்னிறுத்திக் கொள்ளுதல் சால்பாகாது. அவ்வுரைக்குத் தூண்டுதல்களும், குறிப்புகளும், வாழ்வுச் சூழல்களும் பட்டறிவுகளும் வழிவகையாகியிருக்கும் என்பது எவர்க்கும் தெளிவே. அதனை அவையடக்கமாக வைத்து

வாழ்வியல் உரை ஆய்வைத் தொடங்குகிறேன்.

66

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை

என்பது இல்வாழ்க்கையின் முதற்பாடல். இதிலுள்ள மூவர் மூவேந்தர்' போலவோ, 'முத்தமிழ்' ‘முக்கனி, மும்முரசு இன்னவை போலவோ, வெளிப்பட அறியுமாறு வாய்க்கவில்லை. வள்ளுவர் நாளில் இம் ‘மூவர்' எவரும் அறிந்து கொள்ளத் தக்கவராக இருந்திருப்பார். இல்லாக்கால் அவர் இவ்வாறு விளக்கமும் சுட்டும் இல்லாமல் ‘மூவர் என்றிரார். வளிமுதலா எண்ணிய மூன்று” “காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்” என்றவாறு ஆட்சி புரிந்திருப்பார்.

இக்குறளில் இம்மூவர் இவர் என்பது வெளிப்படுமாறு "இயல்புடைய மூவர்" என்றும் "நின்றதுணை என்றும் இரட்டை ஒளிவிளக்குகளைத் தெளிவுக்காக வைத்துளார்.

இல்வாழ்வான் ஆகிய அவனுக்கு இயல்பான தொடர்பு உடைய மூவர் என்றும், அவர் பிறர் போல வந்தும் சென்றும் அகல்கின்ற துணையாவார் அல்லர் என்று புரிய வைக்கிறார்.

தொல்காப்பியந் தொட்டுத் துலங்கும் 'இயற்கைப் புணர்ச்சி' இன்னதென அறிவார், ‘இயல்பின், பொருளறிவார். ஒன்றுவிக்கும் பாலதாணையின் ஒன்றுவார் இயல்பும்

புலப்படும்.