உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

109

இல்வாழ்வான் இயல்பாகவும் கட்டாயமாகவும் இவர் இவரைப் போற்றல் வேண்டும். அது செய்ந்நன்றிக் கடன்

என்பது.

66

குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்

என்னும் புறத்தாலும்,

66

முதியர்ப் பேணிய உதியஞ் சேரல்”

என்னும் வரலாற்றாலும், இனிது விளங்கும். இக் ‘குரவர்’ க் என்பாரும், ‘முதியர்’ என்பாரும் தாய் தந்தையர் என்பது வெளிப்படை, இவர்களைச் சேக்கிழார் அடிகள்,அப்பூதியடிகள் புராணத்தில்,

66

'இயல்புடைய இருவர்” என்றே கட்டிக்காட்டுகிறார். அவ்விருவர் அப்பூதியடிகளாரும், அவர் துணையுமாகிய இருவருமேயாம்.

66

இனி மூன்றாமவர் எவர் என்பதை இளங்கோவடிகளார். இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன்

சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்”

என்பதன் வழியாகச் சுட்டிக் காட்டுகிறார்.

இருமுது குரவர்களாகிய பெற்றோருடன், மனைவியையும் பேணல் இவ்வாழ்வான் கடன் என்பது இதனால் தெளிவுறும். இனி, பெற்றோர், மனைவி, மக்கள் என்னும் ‘மூவர்’ என்பாரும் உளர்

மூவர் - மூன்றுபேர். இதில் பெற்றோர் ஆகிய இருவரையும் ஒருவர் என்பது எண்ணு முறையன்று. மக்கள் என்பதும் ஒருவர் என்னும் வரம்புடையதன்று. மனைவியரும் பன்மையர் உண் என வினா எழுவது இயற்கை. ஆனால் வள்ளுவர் அறம் கண்டார் ஒருமையையன்றி இருமையை எண்ணார். ஏனெனில், ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு” என்று வலியுறுத்துவது அது.

கற்பு என்னும் திண்மைபோல நிறை என்பதையும் இருபாற் பொதுமையாய்ப் பேசுவது வள்ளுவம். 'பெற்றாற் பெறின்’ என்றும் வீழ்வார்க்கு வீழ்வார்' என்றும் ஒருமை நடையிடும்