உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

இளங்குமரனார் தமிழ்வளம்

18

பெருமையது அது. இனி மக்கட்பேறு பின்னே வருவது, வாழ்க்கைத் துணைவி ல்லாவிடின், அவ்வாழ்க்கை இல்வாழ்க்கை எனப்படாது அவன் தன் துணையைப் பேணுதல் போலவே, அவள் தற்கொண்டானைப் பேணுதல் வேண்டும் எனல் சுட்டப்பெறும். மூன்றாம் பாடலில் ‘தான்' என்பதையும் மறவாமல் குறிப்பார் வள்ளுவர். ஆதலால், தந்தை, தாய், மனைவி ஆகிய மூவரே இயல்புடைய மூவர் என்க.

66

"தாய் தந்தை தாரம்” என மூவரைக் கருதியவர் ஈகப் பெருந்தோன்றல் வ.உ.சி. அவர்கள். ஆனால் அதனை உறுதிப் படுத்தாமல் ‘இருக்கலாம்' என ஐயுறவு கொண்டு வரைந்தார்.

இருபத்து நான்காம் அதிகாரம் புகழ். இல்வாழ்வின் இதன் நிறை நிலை ஈதெனக் காட்டுவது. இது ஐந்தாம் பாடல்

66

என்பது.

நத்தம்போல்கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது”

நத்தம் என்பது ‘நந்துதல்' என்பதன் வலித்தல் எனக் காட்டிய உரைகளே வெளிப்படப் பெருகின. நந்தம்என்பதன் சொற்பொருள் ‘சங்கு’

சங்கு என்பது சுட்டுச் சுடரச் செய்வதொன்று சுடச் சுடரும் பொன் என்பது வள்ளுவம்.

“கோட்டு நூறும் மஞ்சளும் கூடிய செவ்வண்ணம் போல” என்னும் இலக்கண உரைகள் சுட்டும் கோட்டு நூறு சங்கு சுடப்பட்ட தூள் சங்கு அல்லது சிப்பிச் கண்ணமே சிறந்த வெண்ணிறத்தது என்பது உலகம் அறிந்தது.

அட்டாலும் பால் சுவையில் என்னும் பாட்டு.

“சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

என்பதை நிலைநாட்டும், சான்றோரை வறுமை எத்துணை வாட்டிலும் அவர் சால்பு நிலையில் குன்றாராய் உயர்ந்தோங்கியே நிற்பார்; அதனைக் கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே என்று கூறுகிறது அட்டாலும் என்னும் அப்பாட்டு. அது நத்தம் போல் கேடு என்பதன் விளக்கமாகும்.