உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

111

சங்கைச் சுடச்சுட வெண்மை பளிச்சிடல் போல் புகழ் வளரத்தக்க வறுமையும், புகழ் நிலைபெற உண்டாகும். இறப்பும் வாழ்வியல் திறம்மிக்கோர்க்கு அல்லாமல் பிறர்க்கு வாய்த்தல் இல்லை என்பது இதன் பொருளாம்.

"ஒப்புரவினால் வரும் கேடு எனின்

“கெடுவாக வையாது உலகம்’

என்பவற்றையும்,

“அறஞ்சாரா நல்குரவு”

என்பதையும்

எண்ணின் புகழ் வறுமையும், பழி வறுமையும் நன்கு

புலப்படும்.

66

கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை

(414)

என்பதொரு குறள் கேள்வி அதிகாரத்தில் உள்ளது. இதில் வரும் ‘ஊற்று' என்பதை ‘ஊற்றுக்கோல் என்றே கொண்டனர். இதற்கு அடுத்த பாடலிலேயே, (415)

66

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார் வாய்ச்சொல்'

என ஊற்றுக்கோல் என்பது வெளிப்பட வரக் கண்டிருந்தும் இவ்வூற்றையும் ஊற்றுக்கோல் எனப்பொருள் கண்டது வியப்புக் குரியதாகும்!

வ்வூற்று ஆற்றிலே தோண்டும் ஊற்றே ஆகும். “ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்" சிறப்புமிகு, ஊற்றே இவண் குறிக்கப்பட்டதாம்.

இங்குக் குறிக்கப்படும் ஒற்கம்- வான்வறண்டு-பொய்த்துப் போன வறுமை ஒல்குதல்-குறைதல். ஓல்கி - ஒல்லி! மெலிந்து படுதல்.

கற்கும் கல்வி ஆற்றுப் பெருக்கு அன்னது. அப்பருவத்து அவ்வாய்ப்புப் பெறாதார். கற்றார் கூறுவன கேட்டேனும், “எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும், ஆன்ற பெருமை தரும் என்பது.