உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

இளங்குமரனார் தமிழ்வளம்

18

66

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து”

என்னும் இக்கேள்வி அதிகாரத்து மற்றொரு குறளும்,

செவிக்கு உணவாகிய கேள்வி விருப்புடையவர் பக்குவமான நல்ல உணவுகளைத் தேடி உண்ணும் பேருண்டியர்க்கு ஒப்பாகக் கேள்விச் செல்வத்தைக் கிடக்கும் இடத்தெல்லாம் தேடிப் பெறுவர்” என்பதாம். அவி உணவு-ஆக்கிய உணவு: ஆன்றோர் அகன்றோர். சுவையுணவைத் தேடித் தேடியுண்ணும் வாயூறியர். இதனை விடுத்து அவியுணவு வேள்வியுணவாகவும், ஆன்றோர் வேள்வியுணவுண்ணும் தேவராகவும் கொள்ளல் வாழ்வியல் வழுக்கல் உடையதாகும்.

66

“ உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும்

என்பது உட்பகைக் குறள்களுள் ஒன்று (883) இதில் வரும் மட்பகையை 'மட்கலம் அறுக்கக் குயவர் பயன்படுத்தும் கருவி’ எனப் பொருள் கண்டனர். குயக்கலத்தை உருளில் கருவி' எனப் பொருள் கண்டனர். குயக்கத்தை உருளில் இருந்து பெயர்த்து எடுக்கும் அறுகருவி மட்பகை ஆகுமா?

·

மட்பகையாவது மண்ணே பகையாக இருப்பது, இதனைத் திருவள்ளுவரே, 'காலாழ் களர்' என்பார். 'புதை சேறு' என்பது நாட்டு வழக்கு “புதைமணல் பகுதி புகாதீர்” என்னும் எச்சரிக்கை காவிரி சார், முக்கொம்புச் சுற்றுலாப் பகுதியில் பொறித்து வைக்கப் பட்டுள்ள தற்காப்பு.

மண் அணுச் செறிவு உடையது. அதனால் அண்-அண்டு- அண்டம் எனப்பட்டது. 'மண்திணி நிலம்' 'மண்டிணி ஞாலம்' என்பது பழைய ஆட்சிகள். அத்திணிவுடைய மண்ணெனும் எண்ணத்தையூட்டி, உள்வாங்கிக் கொண்டு உயிர்க்கு உலை வைப்பது “மண்பகைதானே' ஆதலால் மட்பகை, உள்வாங்கும் பகை: அடுத்தவர் அறியாமலே, தானும் தப்பிக் கொள்ள முடியாமலே, தப்புவிக்க வருவார் ஊர் எனின் அவரும் தப்ப முடியாமலே உள்வாங்க வல்ல புதை மண்ணே மட்பகையாம். இதுவே ‘உட்பகை'யை விளக்க ஒப்பும் உயர்வும் இல்லா

உவமையாம்.