உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

வாழ்வியல் வளம்

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்”

113

றைவன் என

என்னும் குறளில் வரும் "இயற்றியான் உரைகண்டனர்: அரசன் என்று கண்டாரும் உளர்.

'உலகு இயற்றியான்' என்பதை உலகைப் படைத்தவன் எனக் கொள்ளல் ஆகாது. படைத்தல், உண்டாக்கல் என்பவை இயற்றல் ஆகா. இயற்றல் என்னும் வினை, நூல் இயற்றல் சட்டம் இயற்றல் என்பவற்றையே குறிக்கும் வினை மரபு அது.

இறை வாழ்த்தில் இறைவன் பெயர்களாக -இயல்புகளாக- வள்ளுவர் குறித்தவற்றுள் ‘இயற்றியான்' என்றொரு பெயர் இல்லாமை கருதுக. அதேபொழுதில்

66

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு

என்று இயற்றல் கடனாளன் ஆட்சியாளன் என்பதைத் தெளிவிக்கிறார். இதே தெளிவு ஏற்படுமானால்.

66

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது”

இன்னொரு குறள்

66

உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப் படும்”

என்னும் குறளில் வரும் உண்டு, இல்லை என்பவை கடவுள் பற்றியவை இல்லை என்பதை வள்ளுவமே தெளிவித்து விடும் அது.

66

பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அது வின்றேல் மண்புக்கு மாய்வது மன்’

என்பது, இதன் விரியே, “உண்டாலம்ம இவ்வுலகம்” என்னும் புறப்பாடல்.

ஊழுக்கு உலகத்து இயற்கை என்று வள்ளுவமே பொருள் கூறியும் ‘ஊழ்வினை' என்பாரை எப்படி நிறைவு செய்ய முடியும்?