உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

121

2. கால நீட்டிப்பு, மறதி, சோம்பல், நெட்டுறக்கம் என்பவை நாற்பெருங் கேடுகள் (605)

3. ஒன்றற்கு ஒன்று மாறான குழுக்கள், பாழ்படுத்தும் உட்பகைவர், இறையாண்மையை அழிக்கும் குறும்பர் ஆகியவர் நிறுவனக் கேடர்(735)

4. உரிய காலத்தில் உரிய வகையில் முயலாத முயற்சி, பின்னே பலர் நின்று முயன்றாலும் முடியாததேயாம்.(468,535)

5. தெளிவின்றி ஒருவனை நம்புதலும், நம்பியவன் மேல் ஐயப்படுதலும் நீங்காக் கேடுகள் (510)

6. கடுஞ்சொல், கடுமுகம், முறைகேடாம் தண்டனை என்பவை தலைமையைத் தகர்க்கும் தன்மைகள்.(566,567)

உழைப்பாளர் சிறப்பை உரைப்பதொரு குறளைச் சுட்டி அமைத்தல் சாலும். அது:

66

என்பது.

இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர்கரவாது கைசெய்தூண் மாலை யவர்”(1035)

உழவு என்னும் அதிகாரத்தில் உள்ள இக்குறள் கையால் தொழில் புரியும். அனைவரையும் தழுவிக் கொள்ளும் கருத்தினதாம்.

வினைமேற் சென்ற தலைவன் அதனை இனிதாக முடித்து விரைவில் திரும்பி வருதலை விரும்பிய தலைவி,

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து”

என்று வாழ்த்தும் வாழ்த்தினைக் கூறி அமைவோம்.

(1268)