உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இளங்குமரனார் தமிழ்வளம்

18

தரஞ்சிறக்க வழிகள்:

செயல் சிறந்து தரஞ்சிறந்து விளங்க வழிவகைகளையும் காட்டுகிறார் திருவள்ளுவர். அவை:

1. எந்தச் செயலில் ஈடுபட்டாயோ, அந்தச் செயலுக்குக் கேடான எதனையும் செய்யாதே. (162)

2. எந்தச் செயலைச் செய்ய எடுத்துக் கொண்டாயோ அதனை அரைகுறையாகச் செய்யாதே (663,674)

3. செய்யும் செயலில் தேர்ச்சி மிக்கவர் நட்பை டாதே. (519)

4. தேர்ந்தோரினும் தேர்ந்தோர் உறவை மாறாமல் பற்றிக் கொள். (519)

5. செயலின் உட் கூறுகள் அனைத்தும் அறிந்தவன் செயல் திறத்தைப் போற்றிக் கொள். (677)

6. திறமிக்கோர் தகுதியை மதித்துத் தலைமை அறியச் செய்து சிறப்புறுத்து.(655)

7. செயலில் ஈடுபட்டவர் அனைவரும்சுற்றமாகச் சுற்றிக் கொள்ளத்தக்க தலைமை அமைவதாக! (574)

8. மாந்த நேயம் வேறு: தொழில் திறம் வேறு: தொழில் திறந்த மதிப்பீடு செய்தலில் ‘வரிசை அறிதல்' முறையாகும்.(528)

9. தக்காரை மதித்துத் தகவிலாரைத் தண்டித்தல் முறையான செயலேயாம் (549). அதற்கென நாளும் பொழுதும் கண்காணிப்புத் தவறாமை வேண்டும். (520,553,1039)

750,770)

10. தலைமைத் தகுதியே நிறுவனத் தகுதியாம் (547, 740,

வை

என

நிறுவனச் சீர்மைக்கு உரியவை எண்ணவைக்கும் திருள்ளுவர், இச்சீர்மை இல்லாக் கேட்டுக்கு வழியாவன இவை என்பதைச் கட்டாமலும் விட்டார் அல்லர். அவற்றுள் சில:

1. செய்யத் தக்கதைச் செய்யாமை, செய்யத் தகாததைச் செய்தல்