உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

123

பொறிவாயில் ஐந்து அவித்தல், பொய்தீர் ஒழுக்க நெறி நிற்றல் என்பவை நீடுவாழ்தற்குக் காட்டிய வழிமுறைகள், ஐந்தறிந்து, ஐந்தன் இயல் அறிந்து, ஐந்தன் செயல் அறிந்து, பக்குவப் படுத்தி வாழவல்லை பண்பாட்டாளன் வழியிலேயே உலகம் உய்யும் நெறி உள்ளது என்பதை உறுதிப்படுத்துவது உயர்குறள். அது,

66

சுவையொளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின் வகை தெரிவான் கட்டே உலகு

என்பது (27). ஐந்தவித்தானே நீத்தான், துறந்தான், உரவோன், செயற்கரிய செய்வோன், நிறைமொழியின், குணக்குன்றன், அந்தணன், அறவோன் என்றெல்லாம் கூறப்படுவன், அவித்தல் என்பது அழித்தல் அன்று, பக்குவப்படுத்துதல், ஐம்புலன் களையும் பக்குவப்படுத்தியவனே புலமையன்: புலச் செம்மல். அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதினோய் தந்நோய்போல் போற்றாக் கடை

66

என்பது அதன் விளக்கம்

பொறிகளைப் படிப்பான்: பொறிகளைப் படைப்பான்: பொறிகளின் பழுது நீக்குவான்: பொறிகளை இயக்குவான்: அவன் ‘பொறிஞன்: பொறியில் அறிஞன்: பொறியில் மேதை என்று பாராட்டப்படுவான். ஆனால், தன் பொறிகளை அடக்கிக் காக்கும் உரவோனாக அவன் விளங்குகின்றானா என்று வினாவும் தகுதிக் குறள், அவன் பொறிகளில் குறையுடையவன் ஆயினும் ஆக: அது பழியாகாது: பாவமும் ஆகாது: ஆள்வினை இன்மையே பழியும் பாவமும் என்று ஆணையிடும் ஆள்வினைக் குறள்:

66

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி”

என்பது அது.

தன்னை உணர்ந்தவன்

-

தன் பொறி புலன்பேறுகளை நன்கனம் அறிவான். கட்பொறி இல்லார் எத்துணைப் பேர்கள் எத்தகு வியத்தகு வினையாற்றலராக விளங்கியுள்ளனர்: விளங்குகின்றனர் செவிப்பொறியில்லார் எத்துணைச் செயல் வீரர்களாகத் திகழ்ந்துள்ளனர்: திகழ்கின்றனர்