உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இளங்குமரனார் தமிழ்வளம்

18

செவியோடு மூங்கையும் ஆகி இரு பொறி கெட்டும் எத்தகு மேம்படு செயலாண்மையர் இருந்துளர்: இருக்கின்றனர்.

கண்ணும் செவியும் வாயும் ஆகிய முப்பொறியும் முழுதுற முடங்கிப் போனவர்கள் வாழ்வில் முடங்காமல், அடங்காமல் அடங்கா உலகப் புகழுக்கு ஆளாகியமை வரலாறு இல்லையா? காலிரண்டும் இல்லாரும், தோட்பட்டைக்கு மேலே கைகள் இரண்டும் இல்லாரும் எத்தகு கவின் வாழ்வு வாழ்ந்துள்ளனர், வாழ்கின்றனர் இவர்கள் கொண்ட பொறியின்மைகள் இன்மைகளா?

66

பொறிகள் எல்லாமும் குறைவறப் பெற்றிருந்தும் ஆள்வினை அறியாமல் தாழ்வினைப் பொருளாக்கிப் புன்புழுவாய்ப் பூச்சியாய்த் திரிவாரையும், வல் விலங்காய் நச்சுயிரியாய் நரிமைப் பிறவியாய் வாழ்வாரையும் கண்டு என்னே உங்கள் வாழ்வு? ஏழ்மை நோக்குமின்” என்று வீறு காட்டும் வெற்றி வாழ்வன்றோ, பொறியின்மையுற்றும் தன்னை உணர்ந்த தகவால் ஆள்வினை வீறு கொண்டவர் வாழ்வு இருக்கும் அரும் பொருள் - கிடைத்த பெரும் பொருள் எவர்க்கும் எளிய பொருளாம் போலும் மயக்க உணர்வின் மாக்கேடு இது! எத்தகைய அரும்பெரும் பொருள் இவ்வுடல் இவ்வுடலனைய அரும்படைப்பு ஒன்றும் உண்டோ? உண்டோ?

நாம் உள்ளிழுக்கும் மூச்சும், உட்கொள்ளும் உணவும் எத்தனை இயக்கங்களை இயல்பாகக் கொள்கின்றன. அவற்றுக்கு நம் ஆணை என்ன உண்டு? நம் முயற்சி என்ன உண்டு? வேண்டுவ கொண்டு - வேண்டாதன விலக்க ஒழிக்க - -வெளித்தள்ள இவ்வுடல் உறுப்புகள் ஆற்றும் கடன்கள் எத்தகைய

அருமையுடையவை?

6

ஊத்தாம்பை (பலூன்) ஒன்றில், கால் உருள் (டயர்) ஒன்றில் ஒரு துளை விழுந்தால் என்ன ஆகின்றது?

காற்று வெளிப்போன அவற்றின் இருப்பென்ன? இல்லாமை என்ன?

ஆனால் ஒன்பான் பெருந்துறைகளும் எண்ணிலா நுண்துளைகளும் உடைய இவ்வுடற்கண் காற்று நிற்கிறது: இயங்குகிறது: உலவுகிறது: உயிர்க்கிறது! ஒன்றுளே ஒன்பது காண்ட அருமையை எவன் உணர்வான்?