உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இளங்குமரனார் தமிழ்வளம்

18

தெளிய உதவும். அந்நிலையே தனக்கும் பிற உயிர்களுக்குமாம் இன்னிலையும்: நின்னிலையும்

தன்னை விரும்பி நிற்பான் - கடனாற்றுவான் - எவனோ அவன், தீவினை செய்தல் ஆகாது என்பதால் ‘தன்னுயிர்க் காவல் வழியே மன்னுயிர்க் காவலைக் காட்டினார் வள்ளுவர். னனில், “தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்; தீவினை என்னும் செருக்கு சருக்கு" என்றவர் அவர். தீவினை துன்னாமை வேண்டும் என்பதைத்

66

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்”

எனவும் தெளிவித்தார்.

தீ, தன்னையுடையாரின் உளப்பாங்கு செயற்பாங்கு ஆகிய வற்றுக்கு ஏற்ப நலமும் செய்யும்: தீதும் செய்யும். ஆக்கத்திற்கு ஆவதும் அழிவுக்கு ஆவதும் அத்தீயினிடம் இல்லை அதனைக் கொண்டவனிடத்தே தான் உண்டு. ஆனால், தீயவை என்றும் எவரிடத்தும் ஆக்கமாவதில்லை. அழிவே ஆக்கும், தீயவை அவனுக்கேனும் ஆக்கமாகுமா? அவனுக்கே முதல் அழிவு செய்யும் முற்றாகவும் அழிவு செய்யும். அவன் நிழல் அகலாமை போல அவன் தீமையும் அகலாது இருந்து அவனை அழித்துவிட்டே அகலும் என்றும் கூறுகிறார். அதனாலேயே தீவினையைத் தீயிற்கும் அஞ்சவேண்டும் என்று வலியுறுத்தினார்.

பிறர் சொல்லும் வன் சொல்லும் வசையும் தன்னை வருத்துதலையும், பிறர் சொல்லும் மென்செல்லும் இசையும் தன்னை மகிழ்வித்தலையும் அறிபவன், பிறரிடத்து வன் சொல்லும் வசையும் கூறுவனோ?

புண்பட்ட பட்டறிவாளன் ஒருவன் பிறனொருவனைப் புண்படுத்திக் களிப்புறக் கருதுவனோ? கருதினால் அவன் நெஞ்சறிவாம் - ஆறாம் - அருளறிவு உடையவன்தானா?

பட்டான் ஒருவனே பட்டது அறியாமல் பழிவழிப் பட்டான் எனின்,பட்டறியாதவன் தானா பரிவு கொண்டு உருகி நிற்பான்? இவ்வாறு எண்ணிய அருள்வள்ளல் வள்ளுவர்.

66

தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல்?”

என்கிறார்.