உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

என்றும்,

66

வாழ்வியல் வளம்

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்”

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை

என்றும் விளக்குகிறார்.

127

தன் குற்றம் நீங்கிய தகவாளன் பிறர் குற்றம் கண்டு இரங்க வேண்டும்: அக் குற்றம் திருந்த வழிகாட்ட வேண்டும்: அறிவுரை கூறியும் இடித்துரைத்தும் அக் குற்றம்தான் அழிந்துபடாமல் காத்தலைக் கடனாகக் கொள்ளல் வேண்டும். தன் குற்றம் நீங்கியவனே பிறர் குற்றம் நீக்கவல்ல தகவன்: தலைவன்: வேந்தன். இதனையே

66

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என் குற்றம் ஆகும் இறைக்கு

என்று கூறும் குறள்.

-

இறை என்பது தலைமை. குடி - குடும்பத் தலைமை என்றால் என்ன? குழு கூட்டத் தலைமை என்றால் என்ன? தொழில் அலுவல் தலைமை ஆனால் என்ன? அரசு - கட்சி என நாடு தழுவிய தலைமை ஆனால் என்ன? சமயம் - அறநிலை என அமைப்புத் தழுவிய தலைமை ஆனால் என்ன? தன் குற்றம் நீக்கல், பிறர் குற்றம் தீர்க்க வாய்த்த முதற்றகுதியாம். அத் தகுதி இல்லாமையே பல நிலைகளிலும் பாழ்படுத்தும் காட்சி கண் கூடாதல் இற்றை நிலையாம் சான்றுகளை நினைத்துப் பார்த்துத் தெளிவார்களாக.

தன்னுடற் காதலன் தன்னுயிர்க் காதலன், பிறிதுயிர்க்கும் அக்காதல் உண்மை அறிந்து போற்ற வேண்டுமே: போற்றாக்கால் அவன் தன்னையறிந்தான் என்பது எவ்வாறு மெய்யாகும் என்பதால்,

66

என்றும்,

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்