உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

இளங்குமரனார் தமிழ்வளம்

18

66

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி தின்னுயிர் நீக்கும் வினை”

என்றும் கூறினார்.

பிறிதூன் தின்னலும் பிறிதுயிர் நீக்கலும் தன்னை யுணர்ந்தான் செய்யான் எனின் அவன் தன்னைத் தானே கால்லும் தற்கொலைச் சினத்தைக் கொள்ளவும் கொள்ளான் என்று வலியுறுத்துகிறார். அது,

66

என்பது

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்”

சினம் காவாக்கால் தன்னையே கொல்லுமா? சினம் என்பது உள் வெதுப்பு வேக்காடு. அது கொல்லாதா என்ன?

-

தீக்குச்சியை எடுத்துப் பெட்டியின் மருந்தில் உராய் கிறோம். முதற்கண் எது எரிகின்றது. தீக்குச்சிதானே எரிகின்றது? பின்னே தானே பிறவற்றை எரிக்கின்றது. இதனை உணர்த்தவே. சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

66

ஏமப் புணையைச் சுடும்’

99

என்றார். தீ, சேர்ந்தாரைக் கொல்லி: நஞ்சு சேர்ந்தாரைக் கொல்லி; சினமும் சேர்ந்தாரைக் கொல்லி

சினம் ஆளைக் கொல்லுமுன்னே கொல்வனவும் உண்டு, அக்கொலையும் கொலையே என்பாராய், “நகையும் உவகையும் கால்லும் சினத்திற் பகையும் உளவோ பிற’ என்றார்.

66

உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு

என்பது வள்ளுவத் தவம், உடையோ, கோலமோ, பூச்சோ, சடங்கோ தவமாகா. இவ்விரண்டே இவ்விரண்டே தவமென்பது இத் தவக்குறள். தவத்தன் கோலங்கொண்டான் அக் கோலத்திற்கு உரிமை யாகாதவனாக இருத்தலைக் கண்டு அதனைக் கூடா ஒழுக்கம்' எனப் பெயரிட்டார் வள்ளுவர்.

தவக் கோலத்தன் நெஞ்சறிவஞ்சன் எனின், அவன் தவத்தோற்றம் என்ன பெருமையது? என்பாராய்.