உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

கணக்கலை இருக்கும் கடுங்குரல் தூம்பொடு மலைப்பூஞ் சாரல் வண்டுயா ழாக. இன்பல் இமிழிசை கேட்டுக் களிசிறந்து மந்தி நல்லவை மருள்வன நோக்கக் கழைவளர் அடுக்கத்து இயலியாடும் மயில், விழவுக்கள விறலியில் தோன்றும் நாடன்

141

நாட்டு வளம் சொல்லவா இதனைப் பாடினார்? நாட்டுக்கு உரியவன் என்று பாராட்டிக்“கலைவளமிக்க அவனைக் கண்டார். பலராகவும், யான் மட்டுமே அவளை நினைத்து உறக்க மில்லாமல் உருகிக் கிடக்கின்றேன்” என்று தலைவி தோழியிடம் கூறுகின்றாள். இதன் பொருள் எங்கள் காதலை நிறைவேற்றிவை என்பதாம்!

6

கபிலர் தீட்டிய இப்பாட்டு, எத்தனை எத்தனை! பாவலர்களின் பாடல்களுக்குக் கருவும் முளையும் ஆயிற்று என்பது வியப்பானது.

66

இதோ மணிமேகலைச் சாத்தனார்.

வெயில்நுழைபு அறியாக் குயில்நுழை பொதும்பர் மயிலா டரங்கின் மந்திகாண் பனகாண்

என்கிறாரே! மதுரைப் பகுதியில் உள்ள ‘கடமலைக் குண்டு என்னும் மலைச் சுழலில் மயிலாடும் பாறை என்றும் மந்திச் சுனை என்றும் ஆலந்தளி என்றும் ஊரும் பேருமாக இருப்பவை பழந்தமிழரின் இயற்கையொடும் இயைந்த வாழ்வை முழங்குவன அல்லவோ?

66

தோ கம்பர்,

தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கந் தாங்க

கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளைகண் விழித்து நோக்கத்

தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகரயாழின்

வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ?”

என்று பாடுகிறாரே!

மலையிலே கண்ட கபிலர் காட்சி. கம்பரிடத்தில் மருத நிலக் காட்சியாகி விடுகின்றதே அதற்குத் தக்கவாறு அரங்கமைப்பு விரிகின்றதே: வேறு வேறு ஆகின்றவே: ஆயினும் ஆடல் மயில் மட்டும் பாடல் பொருளாகத் தவற வில்லையல்லவா!