உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இளங்குமரனார் தமிழ்வளம்

18

வனப்புச் செய்கின்றது. ஓங்கி உயர்ந்த மூங்கில்கள் அரங்கமாய் அமைந்து அழகு செய்கின்றன. அவ்வரங்கிலே ஆடுகள் விறலிபோல ஆடுகின்றது. மயில். ஆட்டம் மட்டும் கூத்தாகி விடுமா? பாட்டும் வேண்டுமே பின்னணி இசை வேண்டுமே பார்வையாளரும் வேண்டுமே!

கழையாகிய மூங்கிலிலே துளைபோட்டுள்ளது வண்டு. அத்துளையுள் புகுந்து முட்டி வெளிப்படுகின்றது மேல் காற்று. அது குழலிசையாகி இன்பஞ் சேர்க்கின்றது. இஃது இயற்கை வழங்கிய துளைக்கருவி

பாறையில் குதித்துப் பரவி வீழ்கின்றன அருவிகள். அவை இரண்டா மூன்றா? பல அவை முழங்கி வீழ்ந்து கழங்காடுபவை. அவை, மயிலின் ஆட்டத்திற்குவாய்த்த முழவுகள் - மத்தளங்கள் இயற்கை வழங்கியதோற் கருவிகள் அவை.

மலைச் சாரல்: மான்களுக்கு விருப்பமான இடம்: அருவிச் சூழல்: அவற்றுக்கு நீரும் நிழலும் தளிப்புல்லும் தந்து இன்பம் பெருக்கும். ஆதலின் ஆங்குக் கூடிய மான் கூட்டம் சேர்ந்து ஒலிக்கின்றது. அது வங்கியம். ஊது கொம்பு - என்னும் இசைக் கருவியை இசைத்தாற் போல ஒலிக்கின்றது. இஃது இயற்கை வழங்கிய கஞ்சக் கருவி.

பூத்துக்கிடக்கும் பொதும்பராக விளங்கும் அவ்விடத்தில் வண்டுகள் பாடித் திரிகின்றன. அவை யாழிசையாய் இனிக்கின்றன. இஃது இயற்கை அருளிய இணையிலா நரம்புக் கருவி குழலிசை, முழவிசை, தூம்பிசை, யாழிசை ஆகிய இசைகள் விம்ம மயிலி ஆடுகிறாள். அவள் ஆட்டத்தைப் பார்க்க மந்தியார் பார்வையாளராக உள்ளார். தம் ஆட்டம் பாட்டம் குறும்பு குதிப்பு எல்லாவற்றையும் அடக்கி ஒடுக்கி முடக்கி வைத்துவிட்டுக் குந்திக் கொண்டு பார்க்கிறார் மந்தியார். அவர் கலைக் காதலராம் நல்ல மந்தியார் ஆடல் பாடல் பின்னணி இசை எல்லாமும் ஒன்றை ஒன்று விஞ்சி, அழகு சேர்ப்பதால், மந்தியார் மையலொடு பார்க்கிறார். கபிலர் தீட்டிய இயற்கை ஒவியப்பாட்டு இது:

66

ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கில் கோடை அவ்வளி குழலிசை யாக, பாடின் அருவிப் பனிநீர் இன்னிசைத் தோடமை முழவின் துதைகுர லாகக்,