உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

139

நாடி நரம்புகளைத் தூண்டிக் கிளர்ந்தெழச் செய்யும் கீட்ஸ் போன்ற கவிஞர்களும் அக்காலத்தில் இருந்தனர். அவர் களுக்கு அமைந்திருந்த நுட்பமான புலனுணர்வு. அளவிறந்த சிறப்புடையது.

மலரீட்டங்களின் மாயவண்ணங்களை, அவர்களின் காட்சிப்புலன் ஊடுருவிச் செல்லும். அசைந்தாடும் பூங்கொடியின் அருமைப் பாடலிலே. அவர்களின் செவிப் புலன் கிளைக்கும். விரிந்த மலர்களின் பட்டிதழ்களின் மென்மையைத் தொடாமல் தொட்டுணரும். அவர்கள் பொறியும் புலனும், கனிகளின் மணத்திலே மலர்களின் மணத்திலே, இன்னும் இயற்கை அன்னை வழங்கும் எண்ணற்ற இன்ப விருந்துகளிலே கிளைக்கும் அவர்களின் புலமை நெஞ்சம். மனித இனத்தின் பேராற்றல் களாகிய காதல் வீரம் ஆகிய இரண்டையும் ஊடுருவிப் பாய்ந்து பரந்து கிடக்கச் செய்யும் அளவுக்கு, இயற்கையினிடத்து அவர்கள் எல்லையற்ற காதல் கொண்டிருந்தனர்.

பண்டைத் தமிழ்ச் சான்றோர்கள் இயற்கையைத் தனியொரு பொருளாகக் கருதிப் பாடினாரல்லர். “மனித வாழ்க்கையின் பல்வேறு கூறுகளையும் வருணித்துத் தெளிவுபடுத்துதற்காகவே இயற்கையைப் பயன்படுத்தினர்” என்கிறார்.

குறிஞ்சியைப் பாடுதலில் பெருந்திறம் பெற்றவர் கபிலர். அவர் பாடிய குறிஞ்சிப் பாட்டு, பத்துப் பாட்டுள் ஒன்று. அப்பாட்டில் தலைவி மலர் பறிக்கும் காட்சி வருகின்றது. என்னென்ன பூக்களைப் பறிக்கிறாள் என்பதை. ஒரு பெரும் பட்டியலிட்டுக் காட்டுகிறார். அப்பட்டியலில் உள்ள பூக்கள் பத்தா பதினைந்தா? தொண்ணூற்று ஒன்பது. காட்டிலேயே வாழ்வாரும். கானியல் ஆய்வாளரும் கூட அப்பூக்களை யெல்லாம் ன்று கண்டு காட்டல் அரிது. நாம் இயற்கையை விட்டு அவ்வளவு ஒதுங்கி விட்டோம். பலவற்றை அழிய விட்டு விட்டோம் அவற்றின் பெயர்களையும் அறியாமல் விலகி விட்டோம்!

குறிஞ்சிக் கபிலர் அகப்பாடல் ஒன்றை அறியலாம்:

டு

ஒரு பெருமலை, அதற்குப் பக்க மலை ஒன்று: அம்மலையில் இருந்து வெள்ளி யுருக்கு வீழ்வதுபோல அருவிகள் வீழ்கின்றன. பஞ்சுத் துய்யைத் தூவிவிட்டாற் போலத் தூவானம் தவழ்கின்றது. வெண் தூவானம் கருமுகிலுடன் கலந்து வானப் போர்வையாய்