உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

இளங்குமரனார் தமிழ்வளம்

18

எவர்? நெருப்புக்கு வெம்மையூட்டினவர் யாவர்? இயல்பாக அரும்பிய இவற்றின் அழகே, கைபுனைந்தியற்றாக் கவின் பெறுவனப்பாகும்” என்றும்,

66

'செம்பொன்னை உருக்கி வார்த்தாலெனக், காட்சியளிக்கும் அந்திவான் செக்கர் அழகும், கொண்டல் கொண்டலாக ஓடும் புயலின் அழகும், அது பொழியும் மழையின் அழகும், அத்தண்புனல் கற்களை அரிந்தோடும் அருவியின் அழகும்,பச்சைப் பசேலெனப் பெருங்காட்சியளிக்கும் பொழில்களின் அழகும், அவற்றில் பச்சைப் பாம்பெனப் பின்னிக்கிடக்கும் பசுங்கொடிகளின் அழகும், அவற்றினின்றும் அரும்பியுள்ள நகைமலரின் அழகும் மக்கள் உள்ளத்துள்ள இன்ப ஊற்றைத் திறப்பன அல்லவோ? மயிலாடும் அழகும், மான் நடக்கும் அழகும் நந்தூரும் அழகும் புலவருக்கு விருந்தல்லவோ” என்றும் கூறுகிறார்.

ம்

“பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை” என்னும் பொருள் பற்றி ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றவர், அறிஞர் மு.வ. அவர், இலக்கியத்தில் இயற்கை பெறும் இடத்தை இனிதின் இயம்புகிறார்.

66

இயற்கை இயல், விருந்து இயல் ஆகிய இரண்டும், சங்க இலக்கியத்தின் பண்புகளாக உள்ளன. வோர்ட்ஸ் வொர்த்தைப் போல வானோங்கு மலை, பொங்கிவீழ் அருவி,நிறைந்தொளிரும் நீர் நிலை, நெளிந்தோடும் ஆறு ஆகியவற்றை எழில் ததும்பும் ஒவியங்களாகத் தீட்டிக்காட்டும் கவிஞர்கள். சங்ககாலத்தில் உண்டு. ஆனால் அவர்கள் வோர்ட்ஸ் வொர்த்தைப் போல ‘இதுகாண் இயற்கை' என்று எடுத்துக் கூறி விளம்பரப்படுத்துவது இல்லை.

சர் வால்ட்டர் ஸ்காட்டின் நுண்ணிய நோக்கம் படர, எத்துணையோ இயற்கைக் காட்சிகள், மிக நுட்பமான விவரங்களோடு, அவர்களின் இலக்கியங்களிலே சொல்லோ வியங்களாக ஒளிர்கின்றன.

இயற்கைக் காட்சிகளை வருணித்துக் கூறுவதில் ஸ்காட்டைப் போன்ற புலவர்களும், சங்க காலத்தில் உண்டு. அவர்களுடைய நுண்ணிய காட்சியறிவு இன்றைய பயிர் நூல் வல்லாரின் ஆராய்ச்சிக்கும் உதவக் கூடியது. தமிழகத்துப் பயிர் பச்சைகளைப் பற்றிய விவரங்களை அறிய விரும்பும் பயிர் நூல் வல்லார் சங்க இலக்கியப் பாடல்களை முழு நம்பிக்கையோடு பயிலலாம்.