உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. இலக்கியத்தில் இயற்கை

இயற்கையைத் தழுவாத இலக்கியம், தமிழில் இல்லை. அப்படித் தழுவிச் செல்வதே இலக்கியம் என்பதை, வகுத்துக் காட்டிய இலக்கணத்தையுடைய மொழி தமிழ்.

தமிழ் இலக்கணமாக முழுதளவில் கிடைத்துள்ள நூல், தொல்காப்பியம். அதற்கு முன்னரே இலக்கணமாயினும் சரி, இலக்கியமாயினும் சரி, இயற்கையைத் தழுவியே இயல வேண்டும் என்னும், இயற்கைப் பெருநெறி உண்டாயிற்று.

அகப்

தமிழர் பொருளிலக்கணத்தை இரண்டாகப் பகுத்தனர். அவை அகப்பொருள், புறப் பொருள் என்பன. பொருளையும் மூன்று பகுப்பு ஆக்கினர். அவை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பன. முதற்,பொருள் என்பது, நிலமும் பொழுதும் அல்லது இடமும் காலமும், கருப்பொருள் என்பது, தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, இசை, தொழில் முதலியனவாகும். இனித் திணையோ ஐந்து என அகப்பொருள் கூறும். அவை, குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்பன. இவையெல்லாம் இயற்கைதாமே! புறப்பொருள் பூவாகிய வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, தும்பை, வாகை என்பன இயற்கை தாமே! இலக்கியப் பொருளாகி இரண்டும், இயற்கையோடு இயைந்தவை எனின், இயற்கையை ஊடும் பாவுமாகக் கொள்ளாமல், இலக்கியப் பா நெசவு தமிழில் இல்லை என்பது வெளிப்பட விளங்கும்.

.

|

இனி, இயற்கையின் இலக்கணம் யாது எனின், இயற்கையில் தோய்ந்து, இயற்கை முருகை எய்தி, எவரும் நலம் பெற, முருகாற்றுப்படை பாடிய ஆசிரியர் நக்கீரனார் “கைபுனைந் தியற்றாக் கவின் பெறு வனப்பு” என்கிறார்.இவ்விலக்கணத்தில் தோய்ந்த திரு.வி.க. கையால் செய்யப்படுவது செயற்கை: கையால் செய்யப்படாதது இயற்கை: மலையும். ஆறும், காடும், கடலும், எவர் கையால் ஆக்கப்பட்டன? ஞாயிறும், திங்களும், விண்மீன் களும், எவரால் செய்யப்பட்டன? புனலுக்குத் தண்மை ஈந்தவர்