உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

இளங்குமரனார் தமிழ்வளம்

18

காலை 6-45க்கு ‘உதயகீதத்‘ தோடு தொடங்கிய விழா, கொடியேற்றம்; ஒழுக்க வழிபாடு, புது உறுப்பினர் வரவேற்பு வழிபாடு, திருக்குறள் விரிவுரை, குழந்தைகள் நிகழ்ச்சி, தாலப் பொலி,திராவிட சமய விளக்கம், சொற்பொழிவு, கலைநிகழ்ச்சி, கூத்து, ஓரங்க நாடகமெனப் பகல் முழுவதும் விழா! இரவும் விடிய விடிய விழா! எந்த நிகழ்ச்சியும் சோடை சொல்ல முடியாத அவ்வளவு அருமையாய் அமைந்தவை! மொழி பெயர் தேயத்திலே வள்ளுவப் பெருமகனார்க்கு இப்படியொரு விழாவை எண்ணிப் பார்க்கவே வியப்பன்றோ!

ரு

அந்த எளிய மக்கள் உள்ளம் நான் எவ்வளவு பெரியது அவர்கள் பொருள் நிலைக்கு விஞ்சியே விருந்தாளர்கள் தங்குவதற்கும் உண்பதற்கும் செய்திருந்த வாய்ப்புகள் உழைப்பு மிக்க அம்மக்கள் தம் உழைப்புக் கொடையால் எழுப்பிய மேடையும் தொங்கலும் கோலமும் கொள்ளை வனப்புகள் “உள்ள முடைமை உடைமை” என்னும் வள்ளுவச் சுரப்பாளர் என்னதான் செய்யார்?

மேற்குடியினரும் மேட்டுக் குடியினரும் திருவள்ளுவர் ஞான பீடத்தின் மேல் ஒரு கண் வைத்திருப்பது புலப்படாமல் இல்லை: அரசியலாளர்கள் ஒரு கண் வைத்து மயக்கக்கூடும் என்னும் அச்சம் தோன்றாமலும் இல்லை. ஆனால் தெளிவும் திறமும் கடைப்பிடி உயிர்ப்புமுடைய சிவானந்தர்முன் இவை தலைகாட்டி ஒன்றும் செய்துவிடா என்னும் நம்பிக்கையும் வீறுகின்றது.

சிவானந்தர் முதல் அனைவரும் ஊர்தி வரை வந்து உலாக்குழுவினரை அனுப்புங்கால் "உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் “தொழில்” என்னும் அருமைத் திருக்குறள்தான் நின்றது! வள்ளுவர் எவ்வளவு பெரியவர்” என்பது நெஞ்சமெல்லாம் நிறைந்து நின்றது!