உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

135

கேரள மாநிலத்தில் தீண்டப்படாதவர் என்போர் 135 பிரிவினர்: ஏறத்தாழ 18 இலக்கம் பேர்; கோயிலுக்கு வெளியே இன்ன இன்ன பிரிவினர் இத்தனை இத்தனை முழத்திற்கு அப்பால் நிற்க வேண்டும் க என்ற சுட்டு; ஈழவரினத்து சய்த தொண்டு:

முன்னேற்றத்திற்கு நாராயணகுரு தீண்டப்படாத மக்களுக்கு அய்யங்காளி என்பார் செய்த தொண்டு இவற்றையெல்லாம் விரித்துரைக்கிறார். பிறப்பில் வேற்றுமை இல்லை என்னும் வள்ளுவர் சிறப்பே எங்களை அவர்பால் இழுத்தது: அவரையே ஆதி குருவாகக் கொண்டோம்" என்கிறார்.

குஞ்சுகுட்டன் என்பார் சில செய்திகளைச் சொன்னார்:

66

எங்களுக்குள் உள்ள பிரிவுகள் மறைந்து வருகின்றன: கலப்பு மணங்களை ஊக்கப்படுத்துகிறோம். விரைவில் எல்லாப் பிரிவுகளும் ஒழிந்துவிடும் என நம்புகிறோம்.”

மடத்தில் கூடிய ஆள்களில் இருந்தேமடபதிதேர்ந்தெடுக்கப் படுவதாகவும், மடபதிக்குப் பயிற்சி தந்து பொறுப்புகளைத் தருவதாகவும், மடத்து நடைமுறை வழிபாடு எல்லாம் அவரைச் சார்ந்ததே என்றும், அவர்க்குத் துணை மடபதி ஒருவர் உண்டு என்றும், மடபதி இல்லாக்கால் அவர் மனைவியோ, மக்களோ கடமை புரியலாம் என்றும் ஞானபீடத்துள் நுழைய வேண்டுமெனின் ஏழு நாள்கள் நோன்பிருக்க வேண்டும் என்றும், பன்னிரு வயதுக்கு உட்பட்டோர் எவரும் தூயராகப் பால்வேறுபாடு இன்றி ஞானவழிபாடு செய்தற்கு உரியர் என்றும், திருமணச் சடங்கில் தாலி அணிவது இல்லை என்றும் பல செய்திகளை அறிய முடிந்தது.

66

இடைப்பிறவரலாக ஒரு செய்தி:

‘திருக்குறள், ஞானபீடத்தில் மட்டும்தான் இருக்குமாம். வீடுகளில் அதனை வைப்பதில்லையாம். நாங்கள் அனைவரும் ஏழைகள். ஓர் அறைவீடே எங்களுள் பெரும்பாலோர் உடைமை. நாங்கள் குடியும் குடித்தனமும் செய்யும் அச்சிறிய வீட்டில் வழிபாட்டுக்கெனத் தனியிடம் அமைக்க முடிவதில்லை! ஆதலால் நாங்கள் வழிபடும் மறைநூலை எங்கள் வீட்டில் வைத்துக்கொள்வதில்லை" என்கின்றனர்! எத்தகைய ஆழத்தில்

செல்கிறார்கள் அவர்கள்?