உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

இளங்குமரனார் தமிழ்வளம்

18

பூசகர்க்கும் ஞானபீட நடைமுறைக்கும் பணம் வேண்டுமே? ஒவ்வொரு குடும்பத்தினரும், திங்கள் ஒன்றுக்கு அரிசி கிலோ ஒன்றும், உரூபா ஐந்தும் தருகின்றனர். அரிசி வாய்ப்பு இல்லார் பிற தவசங்கள் தருவதையும் ஏற்கின்றனர்.

கோபால் குருப்பு கூறுகிறார்:

66

குஞ்சுகுட்டி செய்ய வேண்டிய செயல்கள், கணவன் மனைவியர் நடைமுறை, அரசன் அமைச்சர் கடமை இவற்றை யெல்லாம் தெள்ளத் தெளிவாகச் சொல்வது திருக்குறள்.

குடும்பத்தை நல்லது ஆக்குபவளும், பொல்லாதது ஆக்குபவளும் பெண்ணே! அதனால்தான், “மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை" என்றார் திருவள்ளுவர். மடபதி தவறினால் அத்தவறு மக்களையெல்லாம் கெடுக்கும். மனைவி தவறினால் அத்தவறு குடும்பத்தையே கெடுக்கும். திருக்குறளை நாங்கள் படிக்கத் தொடங்கி விட்டோம். எங்கள் வழிவரும் மக்கள் அவ்வழியிலேயே முழுமையாக வாழ்வார்கள் என நம்புகிறோம்.”

“திருக்குறள் கள்ளுண்ணாமையைச் சொல்கின்றதே” என வினா எழுப்பப்படுகின்றது. “ஆம், ஞானபீடம் சார்ந்த எவரும் மதுவருந்துவது இல்லை” என்று பெருமிதமாகக் கூறுகிறார். கேட்பவர்களுக்கு விம்மிதம் உண்டாகின்றது.

66

“புலால் உண்ணாமையைப் புகல்கின்றாரோ வள்ளுவர்” என மீண்டும் ஒரு வினாக் கிளர்கின்றது ஆம், ஞான பீடஞ் ஞ் சார்ந்த எவரும் புலாலைத் தொடுவதும் இல்லை” என்று முன்னையினும் எடுப்பாக ஒரு பெரியவர் கூறுகின்றார். கூட்டம் மும்மடங்கு பொலிந்த முகத்தொடும், இன்பக் கண்ணீர் பொழியும் நிலையொடும் திகழ்கின்றது. “வள்ளுவ உயிர்ப்பு ஞானபீட வளாகத்தில் உலாக் கொள்ளத் தொடங்கி விட்டது. உலக உலாக் கொள்ளும் நாளும் தொலைவில் இல்லை என்பதை எண்ணி மகிழ்கின்றோம். திருக்குறளைப் ‘பொய்யா மொழி' என்றும் ‘வாயுறை வாழ்த்து' என்றும் முற்காலத்துச் சொன்ன பெருமக்களையும், 'நம்மறை’ என இக்காலத்து முழங்கும் பெருமக்களையும் நினைந்து நெக்குருகுகிறோம்

66

99

“திருக்குறள் மேல் இவ்வளவு அழுத்தம் உங்களுக்கு ஏற்படுவானேன்?" என ஒரு வினாரக் கிளர்க்கின்றது. சிவானந்தர் மழையெனப் பொழிந்தார்: